தெலுங்கானாவுக்கு எதிர்ப்பு- பிரதமர் வீடு முன்பு போராட்டம்!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: தெலுங்கானாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து சீமாந்திரா தலைவர்கள் டெல்லியில் இன்று மாலை பிரதமர் மன்மோகன்சிங் வீடு முன்பாக போராட்டம் நடத்தினர்.

மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் தெலுங்கானாவுக்கு ஒப்புதல் தர எதிர்ப்பு தெரிவித்து ஏற்கெனவே கடலோர ஆந்திரா, ராயலசீமாவில் போராட்டங்கள் வெடித்திருக்கின்றன.

Protest

இந்நிலையில் டெல்லியில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் கூடிய போது பிரதமர் மன்மோகன்சிங் வீடு முன்பாக ஒன்று கூடிய சீமாந்திராவைச் சேர்ந்தவர்கள் மறியல் போராட்டம் நடத்தினர். அவர்கள் போலீசாரின் தடுப்புகளை உடைத்து பிரதமர் வீட்டுக்குள் செல்ல முயன்றனர்.

Anti-Telangana protest outside PM house

தெலுங்கானாவுக்கு ஒப்புதல் தராதே! ஆந்திராவை பிரிக்காதே! ஐக்கிய ஆந்திராவே எங்கள் தேவை! ஆந்திராவைக் காப்பாற்றுங்கள்! என்று அவர்கள் முழக்கமிட்டனர். போராட்டம் நடத்திய அனைவரையும் போலீசார் கைது செய்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+