கிறிஸ்தவர்களை முறைத்தால் கண்களை பிடுங்கிவிட்டுருவோம்... சீறும் சித்து!
Recommended Video

சண்டிகர்: கிறிஸ்தவர்களை முறைத்து பார்த்தாலே அவர்கள் கண்கள் பிடுங்கி எடுக்கப்படும் என்று பஞ்சாப் அமைச்சரும் முன்னாள் கிரிக்கெட் வீரருமான நவ்ஜோத்சிங் சித்து தெரிவித்துள்ளார்.
கேப்டன் அம்ரீந்தர் தலைமையில் பஞ்சாபில் காங்கிரஸ் அரசு செயல்பட்டு வருகிறது. பஞ்சாப் அரசு சார்பில் நேற்று கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டது. இதில் மாநில அமைச்சர் நவ்ஜோத்சிங் சித்து பங்கேற்றார்.
பாஜகவில் இருந்த இவர் 2016ல் அக்கட்சியை விட்டு விலகினார். பஞ்சாப் சட்டசபை தேர்தல்கள் நடைபெறவிருந்த சில வாரங்கள் முன்பாக இவர் காங்கிரசில் இணைந்து வெற்றி பெற்று அமைச்சருமாகிவிட்டார்.

பிஷப் ஆதங்கம்
சித்து பங்கேற்ற இந்த விழாவில் முன்னதாக பேசிய ஜலந்தர் பகுதியின் ரோமன் கத்தோலிக் சபை தலைவர் பிஷப் பிரான்கோ முல்லகால், "நாட்டின் சில பகுதிகளில் கிறிஸ்தவர்கள் கிறிஸ்துமஸ் கொண்டாடவும் இடையூறு செய்யப்படுகிறது. இந்த நாட்டில் ஒவ்வொரு மதத்தவரும் அவரவர் பண்டிகைகளை கொண்டாடுவது என்பது அடிப்படை உரிமை.

பஞ்சாப் நல்ல மாநிலம்
அதேநேரம், பஞ்சாப்பில் கிறிஸ்தவர்களுக்கு இந்த பிரச்சினை இல்லை. இங்கு சுதந்திரமாக கிறிஸ்துமஸ் கொண்டாட முடிகிறது. என்றார் அவர். கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் கூடாது என சில மாநிலங்களில் வலதுசாரி இந்து அமைப்பினர் எச்சரித்த நிலையில், பிஷப் இவ்வாறு பேசினார்.

சித்து பேச்சு
பின்னர் கூட்டத்தில் பேசிய சித்து, அரசியலமைப்பு சட்டத்தில் அனைத்து மதங்களுக்கும் சம உரிமை உள்ளது. மத வழிபாடுகளை மேற்கொள்ள பஞ்சாப் அரசு உறுதுணையாக இருக்கும். அமிருதசரஸ் பொற்கோவில் வாசல் அனைத்து மதத்தினருக்காகவும்தான் திறந்துள்ளது. அதுபோலத்தான் நமது அரசியல் சாசன சட்டமும் மத சுதந்திரம் வழங்கியுள்ளது.

கண்கள் பிடுங்கப்படும்
பஞ்சாப்பில் கிறிஸ்தவர்களை யாராவது முறைத்து பார்த்தால் அவர்கள் கண்களை தோண்டி எடுத்துவிடுவோம். இவ்வாறு சித்து பேசினார். கேரளாவில் ஆர்எஸ்எஸ் அமைப்பினர் தொடர்ந்து கொலை செய்யப்படுவதை கண்டித்து ம.பி. பாஜக நிர்வாகி ஒருவர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்டுக்கு எச்சரிக்கைவிடுத்து பேசியபோது பயன்படுத்திய அதே வார்த்தையை, சித்து இப்போது கிறிஸ்தவர்களுக்கு ஆதரவாக பயன்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications