ஆந்திரா பேருந்துவிபத்து: அறிக்கை தாக்கல் செய்ய கிரண்குமார்ரெட்டி உத்தரவு
ஹைதராபாத்: ஆந்திராவில் நிகழ்ந்த பேருந்து விபத்து குறித்து உடனடியாக அறிக்கை தாக்கல் செய்யுமாறு காவல் துறையினருக்கு அம்மாநில முதல்வர் கிரண்குமார் ரெட்டி உத்தரவிட்டுள்ளார்.
பெங்களூருவில் இருந்து ஹைதராபாத்துக்கு 45 பேருடன் தனியார் பேருந்து நேற்று இரவு புறப்பட்டது. இன்று அதிகாலை 5.30 மணிக்கு ஆந்திரா மாநிலம், மெகபூப் நகர் மாவட்டம், பலீம் என்ற ஊர் அருகே சென்று கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக சாலை தடுப்பில் பேருந்து மோதியது. இதில் பேருந்தின் டீசல் டேங்கர் வெடித்தில் தீப்பிடித்தது.

இந்த கோர விபத்தில் 44 பேர் உடல் கருகி உயிரிழந்துள்ளனர். பலியானோரின் குடும்பத்தினருக்கு முதல்வர் கிரண்குமார் ரெட்டி இரங்கல் தெரிவித்துள்ளார்.மேலும் காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்குமாறும் அவர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
விபத்தில் சிக்கிய பேருந்தில் இருந்து மீட்கப்பட்ட உடல்கள் அனைத்தும் வனபார்த்தி அரசு மருத்துவமனைக்கு எடுத்துசெல்லப்பட்டது. உடல்கள் அனைத்தும் முற்றிலும் கருகிய நிலையில் இருப்பதால் உடல்களை அடையாளம் காண்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இந்த விபத்து குறித்து கர்நூல் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.சம்பவ இடத்துக்கு மெகபூப்நகர் மாவட்ட ஆட்சியர் விரைந்து சென்று விசாரணை நடத்தி வருகிறார்.தடயவியல் அதிகாரிகளும் விரைந்துள்ளனர்.
-
நின்ற லாரி மீது கார் மோதி விபத்து.. கர்ப்பிணி உள்பட 3 பேர் உயிரிழப்பு.. கரூரில் காலையிலேயே சோகம்! -
துபாயில் கோர விபத்து.. இந்தியர்கள் துடிதுடித்து மரணம்.. நொடியில் நேர்ந்த பயங்கரம்.. என்ன நடந்தது? -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள்












Click it and Unblock the Notifications