தொண்டர்கள், உறவினர்கள் கூட்டம்... இடநெருக்கடியால் அரசு பங்களாவிற்கு செல்கிறார் ஆந்திர முதல்வர்
ஹைதராபாத்: தொண்டர்கள் மற்றும் உறவினர்கள் வருகையால் வீட்டில் இடப்பற்றாக்குறை ஏற்படுவதால், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு அரசு பங்களாவில் குடியேற முடிவெடுத்துள்ளாராம்.
ஆந்திர முதல்வரான சந்திரபாபு நாயுடுவுக்கு ஹைதராபாத் பஞ்சார ஹில்ஸ் பகுதியில் 6 ஆயிரம் சதுரஅடியில் 3 படுக்கை அறைகள் கொண்ட சொந்த வீடு உள்ளது. முன்னர் 10 ஆண்டு காலம் முதல்வராக இருந்தபோதும், 9 ஆண்டுகள் எதிர்க்கட்சி தலைவராக இருந்தபோதிலும் அவர் அரசு பங்களாவிற்குச் செல்லவில்லை. தனது சொந்த வீட்டிலேயே குடியிருந்தார்.

இந்நிலையில், தற்போது மீண்டும் முதல்வராக சந்திரபாபு நாயுடு பதவியேற்றதைத் தொடர்ந்து, அவரைக் காண தொண்டர்கள் அதிகளவில் வருகின்றனர். இதற்கிடையே கர்ப்பமாக உள்ள அவரது மருமகளைப் பார்க்கவும் ஏராளமான உறவினர்கள் வீட்டிற்கு வருகின்றனர்.
இதனால், எப்போதும் அவர் வீட்டில் கூட்டம் நிரம்பி வழிகிறது. எனவே, கூட்டத்தைக் குறைக்கும் வகையில் தொண்டர்களை லேக்வியூவில் உள்ள தனது அமைச்சகம் செயல்படும் அரசு பங்களாவில் சந்திரபாபு நாயுடு சந்தித்து பேசுகிறார்.
ஆனபோதும், எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு தனது வீட்டை விஸ்தரித்துக் கட்ட திட்டமிட்டுள்ளாராம் சந்திரபாபு நாயுடு. 10 படுக்கை அறைகள், 4 வரவேற்பு அறை, வீடியோ காம்பரன்சிங்ஹால், வெளி நாட்டு விருந்தினர்களை சந்திக்க தனி அறை, பார்வையாளர்களை சந்திக்க தனி அறை, பார்வையாளர்கள் காத்திருக்க கூடம், விசாலமான சமையல் அறை போன்ற வசதிகளுடன் கூடிய புதிய வீடு அமைக்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சந்திரபாபு நாயுடுவின் இந்த கனவு இல்லத்தை ஒரு ஆண்டுக்குள் கட்டி முடிக்க பிரபல கட்டுமான நிறுவனத்திடம் ஒப்பந்தமும் போடப்பட்டு உள்ளது.
கட்டுமான பணி முடிவடையும் வரை லேக்வியூவில் உள்ள தனது அமைச்சக அலுவலக பங்களாவில் குடியேற சந்திரபாபு நாயுடு திட்டமிட்டு உள்ளார். இதனால், அங்குள்ள முதலமைச்சர் அலுவலகம் தலைமை செயலக கட்டிடத்துக்கு மாறுகிறது.
இதன்படி, லேக்வியூ பங்களாவை சந்திரபாபு நாயுடுவின் மனைவி, மகன் ஆகியோர் நேற்று பார்வையிட்டு, அதில் சில மாற்றங்களை செய்ய ஆலோசனைகளை வழங்கியுள்ளனர். வருகிற டிசம்பர் மாதம் சந்திரபாபு நாயுடு புதிய வீட்டுக்கு குடியேறுவார் எனத் தெரிகிறது.
இதற்கிடையே, வீட்டை மாற்றாமல் கூடுதலாக சில அறைகள் மற்றும் வரவேற்பு அறைகளை மட்டும் கட்டி சொந்த வீட்டிலேயே குடியிருக்கலாம் என்ற யோசனையிலும் சந்திரபாபு நாயுடு இருப்பதாகவும் சில தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில் எது நிஜமாகப் போகிறது என பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications