20 தமிழர் படுகொலை: ஆந்திரா போலீசுக்கு ஹைதராபாத் ஹைகோர்ட் 'நெத்தியடி'- விசாரணை அறிக்கை நிராகரிப்பு!!
ஹைதராபாத்: 20 தமிழர் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தில் ஆந்திரா போலீசார் தாக்கல் செய்த விசாரணை அறிக்கையை ஹைதராபாத் உயர்நீதிமன்றம் இன்று அதிரடியாக நிராகரித்தது. இது தொடர்பாக விரிவான விசாரணை நடத்தி வரும் நாளை மறுநாள் புதிய அறிக்கையைத் தாக்கல் செய்யவும் ஹைதராபாத் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருப்பதி அருகே 20 தமிழர்கள் செம்மரம் வெட்டியதாக கூறி போலி என்கவுண்ட்டரில் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டனர். இது தொடர்பான வழக்கு ஹைதராபாத் உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இந்த வழக்கில் முதல் கட்டத்திலேயே போலி என்கவுண்ட்டரில் தொடர்புடைய போலீசார் மீது கொலை வழக்குப் பதிவு செய்ய ஹைதராபாத் உயர்நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டது. அதன் பின்னர் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட 6 பேரின் உடல்கள் மறுபிரேத பரிசோதனைக்கும் உத்தரவிடப்பட்டிருந்தது.
இந்நிலையில் ஹைதராபாத் உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணை அறிக்கை ஒன்றை ஆந்திரா போலீசார் தாக்கல் செய்தனர். ஆனால் இந்த விசாரணை அறிக்கையை ஹைதராபாத் நீதிமன்றம் நிராகரித்துவிட்டது.
எந்த ஒரு விவரமுமே இல்லாத விசாரணை அறிக்கையை எப்படி ஏற்பது? போலீசார் மீது வழக்குப் பதிவு செய்த பின்னரும் விசாரணை நடத்தாது ஏன் என்றும் உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
அத்துடன் வரும் 30-ந் தேதிக்குள் விரிவான விசாரணை அறிக்கையைத் தாக்கல் செய்ய வேண்டும்.. இந்த வழக்கின் விசாரணைக்கு உதவும் வகையில் சிறப்பு வழக்கறிஞரை நியமிக்கவும் தயாராக உள்ளோம் என்றும் ஹைதரபாத் உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
-
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
கை, கால்களை வெட்டினால்தான் பயம் வரும்! பலாத்கார வழக்கில் கட் அண்ட் ரைட்டாக சொன்ன கர்நாடக ஹைகோர்ட் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்?












Click it and Unblock the Notifications