காவிரி வழக்கு- உடனே விசாரிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு! கர்நாடகா, மத்திய அரசுக்கு நோட்டீஸ்!!

காவிரி நடுவர் மன்றம் அளித்த இறுதித் தீர்ப்பின்படி, காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி நீர் ஒழுங்குமுறைக் குழு ஆகியவற்றை உடனடியாக அமைக்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்பது தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் கடந்த மாதம் தாக்கல் செய்த மனு.
தமிழக மனு சொல்வது என்ன?
அம்மனுவில், 2007-ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் காவிரி நடுவர் மன்றம் இறுதித் தீர்ப்பை அளிக்கும் போது, காவிரி நதி நீர் பங்கிட்டு பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி நீர் ஒழுங்குமுறை குழுவை அமைக்க வேண்டும் என்று பரிந்துரை செய்தது.
காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பு அரசிதழில் வெளியிடப்பட்ட நிலையிலும் அவை இன்னமும் உருவாக்கப்படவில்லை. தமிழகத்தில் விவசாய பணிகள் தொடங்க இருக்கும் நிலையில், காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி நீர் ஒழுங்குமுறை குழு ஆகியவற்றை அமைக்கும்படி மத்திய நீர்வளத்துறை அமைச்சகத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டிருந்தது.
இம்மனு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஆர்.எம்லோதா, எம்.பி.லோகூர், குரியன் ஜோசப் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. இதனை அவசர மனுவாக ஏற்று விசாரிக்க தமிழகம் சார்பில் கோரப்பட்டது.
தமிழக அரசு வாதம்
மேலும் தமிழக அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சி.எஸ். வைத்தியநாதன், காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி நீர் ஒழுங்குமுறைக் குழு அமைக்கப்படாததால், புதிய மின் திட்டங்களையும், புதிய அணைகளை கட்டுவதற்கானப் பணிகளிலும் கர்நாடக அரசு ஈடுபட்டு வருகிறது.
இதனை தடுப்பதற்கு மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள காவிரி மேற்பார்வை குழுவினால் எந்த பலனும் கிடைக்கவில்லை. நடுவர்மன்ற இறுதி தீர்ப்பு மத்திய அரசிதழில் வெளியிடப்பட்டு 8 மாதங்களுக்கு மேல் ஆகியும் காவிரி மேலாண்மை வாரியம், காவிரி நீர் ஒழுங்குமுறை குழு ஆகியவற்றை அமைக்க மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று வாதிட்டார்.
இதைத் தொடர்ந்து, மனுவை உடனே விசாரிக்க முடியாது என்று நிராகரித்த நீதிபதிகள், இந்த மனு மீது 4 வாரங்களில் பதிலளிக்குமாறு மத்திய அரசு மற்றும் கர்நாடக மாநில அரசுக்கு நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவு பிறப்பித்தனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications