அயோத்தி.. ஞானவாபி வரிசையில் புது சர்ச்சை! போஜ்ஷாலா கமால் மெளலா மசூதியில் தொல்லியல் துறையினர் ஆய்வு
போபால்: மத்தியப் பிரதேசத்தில் உள்ள போஜ்ஷாலா கமால் மெளலா மசூதி கட்டிடத்தில் தொல்லியல் துறையினர் ஆய்யை தொடங்கியுள்ளனர். இந்த மசூதி அமைந்துள்ள இடம் சரஸ்வதி கோயிலுக்கு சொந்தமானது என்று இந்து அமைப்பினர் நீதிமன்றத்தில் முறையிட்டதையடுத்து, இந்த ஆய்வு தொடங்கியுள்ளது.
மத்தியப் பிரதேசத்தின் தார் மாவட்டத்தில் போஜ்ஷாலா கமால் மெளலா மசூதி கட்டிடம் இருக்கிறது. இந்த கட்டிடத்தில் இஸ்லாமியர்கள் சுமார் 800 ஆண்டுகளாக தொழுகை நடத்தி வருகின்றனர். ஆனால், இந்த கட்டிடம் அமைந்துள்ள இடம் இந்து கோயிலுக்கு சொந்தமானது என்றும், கோயிலை இடித்துவிட்டு மசூதி கட்டப்பட்டிருக்கிறது என்றும் நீதிக்கான இந்து முன்னணி எனும் அமைப்பு கூறி வருகிறது. இது தொடர்பாக அம்மாநில உயர்நீதிமன்றத்தில் வழக்கும் தொடுத்திருந்தது.

அதில், 14ம் நூற்றாண்டில் அலாவுதீன் கில்ஜின் ஆட்சிக்காலத்தில் இங்கு இருந்த சரஸ்வதி கோயிலை இடித்துவிட்டு மசூதி கட்டப்பட்டிருக்கிறது. எனவே இந்திய தொல்லியல் துறை இந்த இடத்தை ஆய்வு செய்ய வேண்டும். இங்கு மீண்டும் சரஸ்வதி சிலை நிறுவப்பட வேண்டும் என்று கூறியுள்ளார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், மசூதி கட்டிடத்தில் தொல்லியல் துறை ஆய்வு நடத்த கடந்த 11ம் உத்தரவிட்டிருக்கிறது. 6 மாதங்களுக்குள் ஆய்வை முடிக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது. இந்நிலையில் நேற்று தொல்லியல் துறையினர் கட்டிடத்தில் ஆய்வை தொடங்கினர். இன்று இரண்டாம் கட்ட ஆய்வை நடத்துகின்றனர். ஆய்வின்போது ரேடார், போட்டோகிராபி, வீடியோகிராபி, கார்பன் டேட்டிங் ஆகியவை பயன்படுத்தப்படும்.
ஆனால், நீதிமன்றத்தின் உத்தரவை இஸ்லாமிய அமைப்புகள் விமர்சித்துள்ளன. அயோத்தி போன்று இந்த பிரச்னையை சிலர் வளர்க்க முயற்சிப்பதாகவும் அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இந்த கட்டிடத்தின் உள்ளே உள்ள கட்டுமான அமைப்புகள் மிகுந்த கலை படைப்புடன் இருப்பதால், இதை இந்து கோயிலுடன் ஒப்பிடுவதாகவும் விமர்சனங்கள் எழுந்திருக்கின்றன.
சமீப காலமாக குறிப்பிட்ட சில நாட்களில் மட்டும் இந்து மதத்தை சேர்ந்வர்கள் இந்த கட்டிடத்தில் வழிப்பட தொடங்கியுள்ளனர். ஏற்கெனவே அயோத்தி பிரச்னை முடிந்து, ஞானவாபி பிரச்னை நடந்துக்கொண்டிருக்கையில், தற்போது புதிய சலசலப்புக்களை இந்த போஜ்ஷாலா கமால் மெளலா மசூதி கட்டிடம் தொடங்கி வைத்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
திண்டுக்கல் கொடை ரோடு விஏஓ சத்யா கனவிலும் நினைக்காதது.. அரசு ஊழியர்கள் அறிய வேண்டிய பாடம் -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்? -
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம்












Click it and Unblock the Notifications