எல்லையில் மீண்டும் ஊடுருவி பாகிஸ்தான் அத்துமீறல்.. இந்திய ராணுவத்தின் அதிரடியில் 2 பேர் பலி
ஸ்ரீநகர்:இந்திய எல்லைப்பகுதியில் கொடூர தாக்குதல் நடத்த ஆயுதங்களுடன் வந்த பாகிஸ்தான் எல்லை அதிரடி படையினரின் ஊடுருவல் முயற்சியை இந்திய ராணுவம் முறியடித்துள்ளது. தாக்குதலில் 2 பேர் கொல்லப்பட்டனர்.
ஜம்முகாஷ்மீர் எல்லைப்பகுதியில் இந்திய ராணுவத்தினர் வழக்கம் போல் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். அப்போது எல்லைக்கட்டுப்பாட்டு பகுதியான நாவுகாம் பகுதியில் பாகிஸ்தான் எல்லை அதிரடி படையினரின் ஊடுருவ முயற்சித்ததாக ரகசிய தகவல் கிடைத்தது.

ஊருருவலுக்கு ஏற்ற வகையில் அடர்ந்த காடுகளை அவர்கள் பயன்படுத்தக் கூடும் என்றும் இந்திய ராணுவத்துக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, ராணுவத்தினர் தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கினர்.
அப்போது எதிர்பாராத விதமாக பாகிஸ்தான் படையினர் துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தினர்.
அதற்கு பதிலடியாக இந்திய ராணுவத்தினரும் தாக்குதல் நடத்தினர். அதில் 2 பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் போன்று உடையணிந்த 2 பேர் பலியாகினர். கொல்லப்பட்டவர்களிடம் இருந்து ஏராளமான வெடி மருந்துகளும், ஆயுதங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
உயிரிழந்தவர்கள் பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் தானா என்பது உறுதிப்படுத்தப்படவில்லை. இருப்பினும், தாக்குதல் நடவடிக்கையை தொடர்ந்து எல்லையில் இந்திய ராணுவம் பாதுகாப்பை தீவிரப்படுத்தி உள்ளது.
-
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்!












Click it and Unblock the Notifications