For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

"முடிஞ்சா தொட்டுப் பாருங்க!" ஜார்கண்ட் முதல்வர் ஹேம்நாத் சோரன் ஓபன் சவால்! நோட் பண்ணும் அமலாக்க துறை

Google Oneindia Tamil News

ராஞ்சி: சுரங்க ஒதுக்கீடு தொடர்பான விசாரணையில் ஜார்கண்ட் முதல்வர் ஹேம்நாத் சோரன் ஆஜராகாத நிலையில், அவர் மத்திய அரசுக்குச் சவால் விடுத்துள்ளார்.

ஜார்கண்ட் மாநிலத்தில் கடந்த 2019இல் நடந்த சட்டசபைத் தேர்தலைத் தொடர்ந்து அங்கு ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா- காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் உள்ளது. இதுவரை எவ்வித நெருக்கடியும் இல்லாமல் தான் அங்கு ஆட்சி நடந்து வருகிறது.

மற்ற மாநிலங்களைப் போல இல்லாமல் அங்கு எந்தவொரு சிக்கலும் இல்லாமல் தான் கூட்டணி அரசு சென்று கொண்டிருந்தது. இதனிடையே சில மாதங்களுக்கு முன்பு அங்கும் குழப்பம் ஏற்பட்டது.

சின்னத்திரை நடிகை சித்ரா வழக்கில் திடுக்.. ஹேம்நாத் அட்டகாசங்கள் பற்றி சாட்சியளித்தவருக்கு மிரட்டல்?சின்னத்திரை நடிகை சித்ரா வழக்கில் திடுக்.. ஹேம்நாத் அட்டகாசங்கள் பற்றி சாட்சியளித்தவருக்கு மிரட்டல்?

 சுரங்க ஒதுக்கீடு

சுரங்க ஒதுக்கீடு

கடந்த ஆண்டு ஜார்க்கண்ட்டில் உள்ள நிலக்கரி சுரங்கங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. முதல்வராக உள்ள ஹேமந்த் சோரனுக்கும் சுரங்கங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டதாகப் புகார்கள் கிளம்பின. அரசு பொறுப்பில் இருக்கும் ஒருவருக்குச் சுரங்கம் ஒதுக்கீடு செய்துள்ளது மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்துக்கு எதிரானது என்று பாஜக புகார் அளித்தது. இதனை விசாரித்த தேர்தல் ஆணையம், ஹேமந்த் சோரன் சட்டசபை உறுப்பினர் பதவியைப் பறிக்க ஜார்க்கண்ட் ஆளுநருக்குப் பரிந்துரை செய்ததாகக் கூட தகவல் வெளியானது.

 முடிந்தால் கைது செய்யுங்கள்

முடிந்தால் கைது செய்யுங்கள்

இருப்பினும், அதன் பின்னர் எந்தவொரு நடவடிக்கையும் இல்லாமல் இருந்தது. இதனிடையே இது தொடர்பான வழக்கு விசாரணைக்கு இன்று ஆஜராகும்படி ஹேமந்த் சோரனுக்கு அமலாக்கத் துறை சம்மன் அனுப்பி இருந்தது. இதனிடையே சம்மனுக்கு ஆஜராக மறுத்துள்ள ஹேமந்த் சோரன், துணிவிருந்தால் தன்னை கைது செய்யட்டும் என்றும் சவால் விடுத்து உள்ளார். மேலும், தான் குற்றவாளி என்றால் கைது செய்யாமல் விசாரணை என அலைக்கழிப்பது ஏன் என்று கேள்வி எழுப்பினார்.

 அச்சமில்லை

அச்சமில்லை

இது தொடர்பாகத் தனது கட்சி தொண்டர்கள் மத்தியில் பேசிய அவர், "ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட ஜார்க்கண்ட் அரசைச் சீர்குலைக்க மத்திய அமைப்புகளை பாஜக கட்டவிழ்த்து விட்டுள்ளது. அமலாக்கத் துறை, சிபிஐ கண்டு நான் பயப்படவில்லை. அவர்களை எதிர்த்தால் நசுக்கப்படுவார்கள் எனக் காட்டவே அரசியல் சாசன அமைப்புகளைத் தவறாகப் பயன்படுத்துகிறார்கள். இந்த சதிக்கு மக்களிடம் இருந்து சரியான பதில் கிடைக்கும்.

 போக மாட்டேன்

போக மாட்டேன்

நான் அமலாக்கத் துறை விசாரணைக்கு ஆஜராகப் போவதில்லை. அதற்குப் பதிலாக சத்தீஸ்கரில் பழங்குடியினர் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ளேன். பாஜக தலைமையிலான மத்திய அரசு அரசியல் பழிவாங்கலில் பிஸியாக இருக்கும்போது தப்பியோடிய தொழிலதிபர்களை விடுவிக்கும் முயற்சியும் ஒரு பக்கம் நடந்து வருகிறது" என்றும் அவர் கடுமையாக பாஜக அரசைச் சாடி பேசினார்.

 தற்போதைய சூழல்

தற்போதைய சூழல்

சுரங்க ஒதுக்கீடு விவகாரத்தில் ஹேம்நாத் சோரன் தகுதி நீக்கம் செய்யப்படும் ஆபத்து இருக்கிறது. ஏற்கனவே அவர் மீது நடவடிக்கை எடுக்குமாறு ஆளுநர் ரமேஷ் பாயிஸுக்கு தேர்தல் ஆணையம் பரிந்துரை செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. இருப்பினும், ஆளுநர் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதற்கிடையே பாஜக அங்கு எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கி ஆட்சியைப் பிடிக்க முயல்வதாகவும் ஹேம்நாத் சோரன் தரப்பு பரபர புகாரை அளித்துள்ளது.

 வீழ மாட்டோம்

வீழ மாட்டோம்

முன்னதாக இது குறித்து ஹோம்நாத் சோரன் தனது ட்விட்டரில், "பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினரின் உரிமைகளைத் தடுப்பதையே நோக்கமாகக் கொண்டு இப்படி என்னைத் தொடர்ச்சியாகத் துன்புறுத்தி வருகின்றனர். எங்கள் முன்னோர்கள் நமக்குத் தோற்கடிக்கக் கற்றுக்கொடுக்கவில்லை, எப்படிப் போராடி வெல்ல வேண்டும் என்றே கற்றுக் கொடுத்தார்கள்.

 அனைவருக்குமான அரசு

அனைவருக்குமான அரசு

நாங்கள் அனைவருக்குமான அரசாக இருப்பதைச் சிலரால் ஏற்றுக் கொள்ள முடிவில்லை" என்று அவர் பதிவிட்டுள்ளார். "ஆபரேஷன் லோட்டஸ்" திட்டத்தின் கீழ் எம்எல்ஏக்களை வாங்க முயல்வதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். அண்டை மாநிலமான வங்காளத்தில் சுமார் ₹ 50 லட்சம் பணத்துடன் சில பாஜக தலைவர்கள் கைது தடுத்து நிறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. ஹோம்நாத் சோரனின் உதவியாளரான பங்கஜ் மிஸ்ராவை சிபிஐ ஏற்கனவே இரு வழக்குகளில் கைது செய்து உள்ளது குறிப்பிடத்தக்கது.

English summary
Jharkhand Chief Minister Hemant Soren calling central probe agency to arrest him: Cases against Jharkhand Chief Minister Hemant Soren.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X