விஷாலுக்கும் விவசாயிகளுக்கும் வித்தியாசம் இதுதான்.... 'செய்து காட்டிய' அருண்ஜேட்லி...
டெல்லி: மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லியை நடிகர்கள் விஷால், பிரகாஷ் ராஜ், இயக்குநர் பாண்டிராஜ் ஆகியோர் சந்தித்து பேசியபோது கிடைக்காத மரியாதை இன்று விவசாயிகள் சந்தித்து பேசியபோது கிடைத்துள்ளது.
டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக விவசாயிகள் ஒரு குழுவாக போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
இந்த போராட்டக்காரர்களை விஷால், பிரகாஷ் ராஜ், பாண்டிராஜ் உள்ளிட்டோர் சமீபத்தில் சந்தித்து ஆறுதல் கூறினர். மத்திய அரசுக்கு விஷயத்தை கொண்டு செல்வதாக உறுதியளித்தனர்.

விஷால் சந்திப்பு
இந்த நிலையில், சில தினங்கள் முன்பு, விவசாயிகளை சந்தித்து பேசிய இந்த நடிகர்கள், நிதி அமைச்சர் அருண் ஜேட்லியை அவரது அலுவலகத்தில் வைத்து சந்தித்து ஒரு மனுவை அளித்தனர். பிறகு விவசாயிகளிடம் வந்து, உங்கள் பிரச்சினைகள் தீர நிதி அமைச்சரிடம் பேசியுள்ளோம் என கூறினர்.
|
கை கட்டி நின்றனர்
வெறும் ஒரு நிமிடமே நடந்த இந்த சந்திப்பின்போது, நடிகர்களை அமைச்சர் அமரக் கூட சொல்லவில்லை. கை கட்டியபடிதான் அவர்கள் நின்றிருந்தனர். அருண் ஜேட்லி முகத்தில் ஒரு இறுக்கம் காணப்பட்டது.

ஸ்டன்ட்
மேலும், தமிழக விவசாயிகள் போராட்டம் தொடர்பாக, நிதி அமைச்சரிடம், நடிகர்கள் எதுவும் பேசவே இல்லை என்று தகவல் வெளியானது. இது வெறும் ஸ்டன்ட் என நிதி அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன.
|
உரிய மரியாதை
இந்நிலையில், போராட்டம் நடத்திய விவசாய குழு பிரதிநிதிகள் இன்று, திமுக எம்.பி திருச்சி சிவாவுடன் இணைந்து அருண் ஜேட்லியை சந்தித்தனர். அப்போது விவசாயிகளை தனக்கு எதிரேயுள்ள இருக்கையில் அமர வைத்து சிரித்த முகத்துடன் பேசிக்கொண்டிருந்தார். இந்த போட்டோ இப்போது வெளியாகியுள்ளது. யாரை எப்படி நடத்த வேண்டும் என்பது தெரிந்திருப்பதால்தான் ஜேட்லி மத்திய அமைச்சராக உயர்ந்திருப்பாரோ?
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications