டெல்லி முதல்வரானார் கெஜ்ரிவால்: யாகம் நடத்தி கடவுளுக்கு நன்றி சொன்ன அவரது தந்தை
டெல்லி: ஆம் ஆத்மி கட்சித் தலைவரான அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லியின் முதல்வராக பதவியேற்றதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக கோவிலில் யாகம் நடத்தியுள்ளார் அவரது தந்தை கோவிந்த் ராம்.
நடந்து முடிந்த டெல்லி சட்ட சபைத் தேர்தலில் 28 தொகுதிகளில் வெற்றி பெற்ற ஆம் ஆத்மி கட்சி காங்கிரஸ் ஆதரவுடன் டெல்லியில் ஆட்சி அமைத்துள்ளது. அக்கட்சியின் தலைவரான அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லி மாநிலத்தின் முதல்வராக கடந்த சனியன்று பதவியேற்றுள்ளார்.
இந்நிலையில், டெல்லியின் முதல்வராக பொறுப்பேற்றிருக்கும் தனது மகன், ‘ஆம் ஆத்மி கட்சி சார்பில் டெல்லி மக்களுக்கு அளிக் கப்பட்டிருந்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற கடவுளின் அருளைப் பெறும் வகையிலும், ஆரோக்கியம் வேண்டியும் அவரது தந்தை கோவிந்த் ராம், அங்குள்ள கோயிலில் ஞாயிற்றுக்கிழமை சிறப்பு யாகத்தை நடத்தியுள்ளார்.
ஓய்வு பெற்ற அரசு அதிகாரியான கோவிந்த் ராம் கேஜ்ரிவால், தனது பகுதியில் வசிக்கும் மக்களு டன் கோயிலுக்குச் சென்று இந்த யாகத்தை நடத்தினார். மேலும் இது குறித்து அவர் கூறுகையில் :-

ஆசிர்வாதம்...
அர்விந்த் கேஜ்ரிவால் மிகச் சிறந்த மனிதர். எங்கள் மீது மிகுந்த அன்பு வைத்திருக்கிறார். அவர் வீட்டிலிருந்து வெளியே செல்லும்போது எல்லாம் எனது காலில் விழுந்து ஆசி பெறாமல் செல்ல மாட்டார்.

அதே சராசரி மனிதனாக...
முதல்வரான பின்பும், ஆசி பெறும் பழக்கத்தை அவர் விடவில்லை. முதல்வரான பின்பு அவரின் நடவடிக்கைகளில் எந்த மாற்றமும் இல்லை. எப்போதும் போலத்தான் உள்ளார்.

கடவுள் துணையுடன்...
எனது மகனுக்கு தீவிர கடவுள் பக்தி உண்டு. சவால்கள் அனைத் தையும் கடவுளின் துணையுடன் அவர் எதிர்கொள்வார்" என்றார்.

கடவுளின் பாதுகாப்பு...
டெல்லி போலீஸாரின் பாதுகாப்பை ஏற்க வேண்டும் என்று அர்விந்த் கேஜ்ரிவாலை வலியுறுத்துவீர்களா எனக் கேட்டபோது, "கடவுளின் பாதுகாப்பு அவருக்கு உள்ளது. அவர் அர்விந்த்தை பார்த்துக்கொள்வார்" என்றார் கோவிந்த் ராம்.

கடவுள் கையில்...
மேலும், இந்தியப் பிரதமராக கெஜ்ரிவால் வருவாரா எனக் கேட்கப் பட்ட கேள்விக்கு, ‘ஆம் ஆத்மி கட்சியினர் நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணியில் இப்போதே ஈடுபட ஆரம்பித்து விட்டனர். ஆனால், யார் பிரதமராக வர வேண்டும் என்பதையெல்லாம் கடவுள் தான் முடிவு செய்வார்' எனத் தெரிவித்துள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications