வேண்டும் என்றே இந்தியாவை சீண்டுகிறது பாகிஸ்தான்.. ஜேட்லி குற்றச்சாட்டு
அமிர்தசரஸ்: எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் பாகிஸ்தான் படையினர் தொடர்ந்து தாக்குவதும், போர் நிறுத்த உடன்பாட்டை மீறும் வகையில் நடந்து கொள்வதும் வேண்டும் என்றே நடந்து கொள்வது போலத் தெரிகிறது என்று மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் அருண் ஜேட்லி கூறியுள்ளார்.
இந்தியாவுடன் நல்லுறவு ஏற்படுவதையும், சுமூக உறவுடன் இரு நாடுகளும் திகழ்வதையும் பாகிஸ்தான் ராணுவமும், பாகிஸ்தான் அதிகார வர்க்கத்தில் பலரும் விரும்பவில்லை என்பதையே இது காட்டுவதாகவும் அவர் கூறியுள்ளார்.
பஞ்சாப் மாநிலத்தில், பாகிஸ்தான் எல்லையை ஒட்டியுள்ள இந்திய பாதுகாப்பு முகாம்களை நேற்று ஜேட்லி பார்வையிட்டார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில் இதைத் தெரிவித்தார் ஜேட்லி.

பாகிஸ்தானுக்கு இந்தியாவைப் பிடிக்கவில்லை
ஜேட்லி கூறுகையில், வேண்டும் என்றே அவர்கள் அத்துமீறல்களில் ஈடுபடுகிறார்கள். முன்பு எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் மட்டுமே எல்லை மீறினார்கள். இப்போது சர்வதேச எல்லையிலும் வாலாட்டுகிறார்கள். இந்தியாவை அவர்களுக்குப் பிடிக்கவில்லை என்பதேயே இது காட்டுகிறது.

நல்லுறவை விரும்பவில்லை
பாகிஸ்தானிலும், அதன் அதிகார வர்க்கத்தினரும் இந்தியாவுடன் நல்லுறவு நீடிப்பதை விரும்பவில்லை என்றே தெரிகிறது.

வீரர்கள் தயார்
ஆனால் நமது வீரர்கள் எத்தகைய சூழலையும் சந்திக்கும் ஆயத்தத்தில் உள்ளனர். உரிய முறையில் அவர்கள் பதிலடி தருவார்கள் என்றார் ஜேட்லி.

வீரர்களுடன் பேச்சு
முன்னதாக வீரர்களுடன் கலந்துரையாடினார் ஜேட்லி. அவர்களது தீரமிகு பணியையும் பாராட்டினார். ஜேட்லியுடன் ராணுவத் தலைமைத் தளபதி ஜெனரல் தல்பீர் சிங் சுஹாக் உள்ளிட்டோரும் போயிருந்தனர்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications