நேற்று மழையால் போட்டி கைவிடப்பட்டதால்.. மனதளவில் கொஞ்சம் சோர்வு அடைந்தோம்.. சுப்மன் கில்
அகமதாபாத்: ஐபிஎல் இறுதி ஆட்டத்தில் நேற்று மழை குறுக்கிட்டதால் இறுதிப்போட்டி இன்று நடைபெற்று வருகிறது. இதனிடையே இன்று போட்டி தொடங்கும் முன்பாக பேட்டி அளித்த சுப்மன் கில், நேற்று போட்டி நடைபெறாததால் மனதளவில் சோர்வாக உணர்ந்ததாக குறிப்பிட்டார்.
16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் சாம்பியன் யார் என்பதை நிர்ணயிக்கும் இறுதி ஆட்டம் குஜராத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்த்தில் நடைபெற்று வருகிறது. உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமான இங்கு ஏறத்தாழ லட்சம் ரசிகர்கள் போட்டியை கண்டுகளிக்க முடியும். இறுதிப்போட்டி நேற்று நடைபெறுவதாக இருந்தது. போட்டியைக் காண ரசிகர்கள் பட்டாளம் அணி அணியாக திரண்டது.

ஆனால் ஆட்டம் தொடங்குவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பாக திடீரென மழை குறுக்கிட்டது. ஓவர்கள் குறைக்கப்பட்டு போட்டி நடத்தப்படும் என ரசிகர்கள் காத்திருந்தனர். ஆனால், ரசிகர்கள் மழையின் ஆட்டத்தை மட்டுமே பார்க்க முடிந்தது. மைதானத்திற்குள் குளம் போல தண்ணீர் தேங்கியது. இதனால் போட்டி நேற்று கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
ரிசர்வ் டேவான இன்று ஐபிஎல் இறுதிப் போட்டி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி தற்போது ஐபிஎல் இறூதி ஆட்டம் நடைபெற்று வருகிறது. இதனிடையே, நேற்று போட்டியின் போது மழை குறுக்கிட்டதால் ரசிகர்கள் மட்டும் அல்ல வீரர்களும் சோர்வடைந்துதான் போயிருக்கின்றனர். குஜராத் அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் சுப்மான் கில் இது தொடர்பாக கூறியதாவது:-
நேற்று விளையாடுவதற்காக நாங்கள் தயாராக இருந்தோம். நாங்கள் அதன்பிறகு எந்த உடல் பயிற்சியிலும் ஈடுபடவில்லை. எனவே மனதளவில் சற்று சோர்வாக உணர்ந்தேன். ஆனால் உடல் அளவில் நன்றாக இருக்கிறோம். மற்றொரு போட்டி போலவே இதை விளையாடி பணியை சிறப்பாக முடிக்க வேண்டும்" என்றார்.
இதற்கிடையே இன்று ஐபிஎல் இறுதிப்போட்டி நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி குஜராத் டைட்டன்ஸ் பேட்டிங் செய்து வருகிறது. இந்த சீசனில் அசுரத்தனமான ஃபார்மில் இருக்கும் சுப்மன் கில் துவக்கத்தில் அதிரடி காட்டினார். சுப்மன் கில் கொடுத்த கேட்சையும் தீபக் சஹார் தவறவிட்டார்.
இதனால் அவருக்கு அதிர்ஷ்டமும் கை கொடுக்கவே பந்துகளை நாலாபுறமும் சிதறடித்தார். எனினும் நீண்ட நேரம் அவரால் நிலைக்க முடியவில்லை. 20 பந்துகளில் 39 ரன்கள் எடுத்த நிலையில் ஜடேஜா பந்தில் தோனி ஸ்டம்பிங் செய்ய ஆட்டமிழந்து வெளியேறினார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications