மிசோரத்தில் மீசை முறுக்கும் பாஜக.. இது நடந்தால் காங்கிரஸுக்கு பெரும் சிக்கல்! வெற்றி யாருக்கு?
அய்சால்: மிசோரத்தில் வாக்குப்பதிவு நடந்து முடிந்திருக்கும் நிலையில், அங்கு யாருக்கு வெற்றிவாய்ப்பு இருக்கிறது? தொங்கு சட்டசபை அமைந்தால் என்ன நடக்கும் என்பதை பார்ப்போம்.
வடகிழக்கு மாநிலமான மிசோரத்தில் கடந்த 7 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. 40 தொகுதிகளை கொண்ட இந்த மாநிலத்தில் சொராம்தங்கா தலைமையிலான எம்.என்.எப் கட்சி ஆட்சியில் இருந்து வருகிறது. அவரது பதவிக்காலம் நிறைவடையும் நிலையில் 7 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் என தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதில் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்ற முனைப்புடன் ஆளும் எம்.என்.எப், ZPM மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் தீவிர தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டன.

பாஜகவும் தன் பங்கிற்கு தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டாலும் மும்முனைப் போட்டியே நீடித்தது. தேர்தல் பரபரப்புகள் முடிந்து நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது. காலை முதலே பொதுமக்கள் நீண்ட வரிசையில் ஆர்வமாக நின்று ஜனநாயக கடமையை ஆற்றினர். அதன் அடிப்படையில் 80.43 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது. கடந்த 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் 80.03 சதவீத வாக்குகள் மட்டுமே பதிவாகி இருக்கின்றன.
அதை ஒப்பிடுகையில் இந்த தேர்தலில் .40 சதவீதம் அதிக வாக்குகள் பதிவாகி இருக்கின்றன. இதுவரை வெளியான தகவலின்படி கட்சிகளிடையே கடும் போட்டி நிலவும் என்றும், தேர்தல் முடிவுகளில் சிறிய அளவிலான தொகுதி வித்தியாசமே இருக்கும் என்று கூறப்படுகிறது. குறிப்பாக குகி-சோ சமுதாயத்தை சேர்ந்த 12 ஆயிரம் பேர் உட்பட மியான்மரிலிருந்து வந்த 35,000 அகதிகளுக்கு இருப்பிடம் வழங்கியது, மிசோ தேசியவாத கொள்கையை உயர்த்திப் பிடித்தது போன்றவை ஆளும் எம்.என்.எப் கட்சிக்கு பலமாக பார்க்கப்படுகிறது.
அதேபோல் முழுக்க முழுக்க ஊழல் ஒழிப்பையும், ஊழலற்ற அரசை நடத்துவோம் என ஆம் ஆத்மி ஸ்டைலில் பிரச்சாரம் செய்த ZPM கட்சிக்கும் இதில் நல்ல வரவேற்பு இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 2018 தேர்தலிலும் இக்கட்சி 8 இடங்களில் வெற்றிபெற்று இருந்தது. இக்கட்சியின் வளர்ச்சி காங்கிரஸுக்கு சவாலாக இருந்தது. ஆனாலும், காங்கிரஸ் கட்சி இம்முறை மீண்டெழுந்து இருப்பதாக பார்க்கப்படுகிறது. எனவே இந்த மூன்று கட்சிகளில் ஏதாவது ஒன்று முன்னிலை பெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மத்தியில் ஆளும் கட்சியாக இருந்தாலும் மிசோரத்தில் குட்டி கட்சியாக பார்க்கப்படும் பாஜகவே இந்த தேர்தலில் கிங் மேக்கராக இருக்கும் என்று கூறப்படுகிறது.
தேர்தல் முடிவுகளில் இழுபறி நிலை தொடர்ந்தாலோ தொங்கு சட்டசபை அமையும் சூழல் ஏற்பட்டாலோ குறைவான இடங்களில் வெற்றிபெற்ற பாஜக, ஆளும் எம்.என்.எப் அல்லது ZPM ஆகிய கட்சிகளுக்கு ஆதரவளித்து ஆட்சியமைக்க வாய்ப்பு உள்ளது. எனவே காங்கிரஸ் அதிக தொகுதிகள் வித்தியாசத்தில் வெற்றிபெறாவிட்டால் ஆட்சியமைப்பது கடினமாகிவிடும். இதனை மனதில் வைத்து மிசோரம் தேர்தல் பிரச்சாரத்தில் ராகுல் காந்தி, எம்.என்.எப் மற்றும் ZPM ஆகிய கட்சிகளை பாஜகவின் நிழைவு வாயில் என்று விமர்சித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications