For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஆசாராமின் ஆசிரமம் இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டது

Google Oneindia Tamil News

ஜபல்பூர், ம.பி.: மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூர் அருகே பெதாகட் என்ற இடத்தில் உள்ள சர்ச்சைக்குரிய சா்மியார் ஆசாராம் பாபுவின் ஆசிரமத்தை உள்ளூர் அதிகாரிகள் இடித்துத் தள்ளினர்.

இந்த ஆசிரமத்தை இடிப்பதற்கு பல்வேறு சட்ட ரீதியான சிக்கல்கள் இருந்து வந்தன. அவை நீங்கியதைத் தொடர்ந்து தற்போது ஆசிரமம் இடிக்கப்பட்டுள்ளது.

கிட்டத்தட்ட 7000 சதுர அடி பரப்பளவிலான இடத்தில் இந்த ஆசிரமம் கட்டப்பட்டிருந்தது. ஆசிரமம் இடிக்கப்படுவதையொட்டி பெருமளவிலான போலீஸார் பாதுகாப்புக்காக குவி்க்கப்பட்டிருந்தனர்.

Asaram Bapu's ashram being demolished in Jabalpur

இதுகுறித்து பெதாநகர் நகராட்சியின் தலைமை செயலதிகாரி அனிதா யாதவ், தாசில்தார் ரிஷப் ஜெயின் செய்தியாளர்களிடம் கூறுகையில், இடிக்கப்பட்ட கட்டடம், சட்டவிரோதமாக கட்டப்பட்டதாகும். இதை இடிக்க தடை வாங்கியிருந்தனர். தற்போது அது நீங்கியுள்ளதைத் தொடர்ந்து இடிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கட்டடம், இடம் ஆகிய அனைத்தும் சேர்த்து மொத்தம் 21,000 சதுர அடி பரப்பளவாகும் என்றனர்.

English summary
Local authorities today demolished Asaram's ashram situated at Chowkitaal in Bhedhaghat area near after clearing all legal hurdles. Nearly 7,000 square feet of permanent illegal construction in the ashram was demolished by local authorities in the presence of a large number of police personnel, officials said.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X