கடலைமுத்து தெரியும்.. "கருத்தமுத்து" தெரியுமா?.. அதுல பாருங்க, ஒரு பஞ்சாயத்து!
கொச்சி: கருத்தமுத்து என்று ஒரு டிவி சிரியல்.. நம்ம ஊரில் அல்ல.. மலையாளத்தில். அந்த சீரியல் அங்கு ரொம்ப பாப்புலர். காரணம், அந்த தொடரின் நாயகியாக நடித்து வந்த பிரேமி விஸ்வநாத்தின் நடிப்புக்குக் கிடைத்த மக்கள் வரவேற்பு. ஆனால் இப்போது திடீரென பிரேமி தொடரிலிருந்து விலகி விட்டார்.. கருத்தமுத்து முகம் சிறுத்தமுத்தாக மாறிப் போய் நிற்கிறது.
ஆனால் தான் எந்த உள்நோக்கத்துடனும் விலகவில்லை என்று விளக்கியுள்ளார் பிரேமி விஸ்வநாத். தன்னை அவர்கள்தான் நீக்கியதாக அவர் விளக்கியுள்ளார்.
ஆசியாநெட் சேனலில்தான் இந்தத் தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. ஆனால் வேறு ஒரு சேனலின் நிகழ்ச்சியில் பிரேமி கலந்து கொள்ளப்போக அதனால் கடுப்பான ஆசியாநெட், பிரேமியை நீக்க விட்டதாம்.

கருப்பு கார்த்திகா
கருத்தமுத்து தொடரில் கார்த்திகா என்ற பெண்ணாக நடித்து வந்தார் பிரேமி. அந்த ரோல் மலையாள ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்த ஒன்றாகும். குறிப்பாக இல்லத்தரசிகனின் அன்புக்குப் பாத்திரமானார் "கார்த்திகா".

"குட்டிக்கலவரம்"
இந்த நிலையில்தான் பிளவர்ஸ் சேனலின் குட்டிக்கலவரா என்ற நிகழ்ச்சியில் பங்கேற்றார் பிரேமி. இதனால் ஆசியாநெட் நிர்வாகம் அதிர்ச்சி அடைந்தது. கோபமடைந்தது. இதையடுத்து கார்த்திகா கதாபாத்திரத்தில் கை வைக்க உத்தரவிட்டனர்.

வேலையே இல்லாமல் 2 மாதம்
இதனால் கார்த்திகா பாத்திரத்தின் முக்கியத்துவத்தைக் குறைத்தனர். கடந்த 2 மாதமாக பிரேமி நடித்த காட்சிகள் அடியோடு குறைந்து போயின. இதனால் வேலையே இல்லாமல் சும்மா உட்கார்ந்திருக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டார் பிரேமி.

நீக்க விட்டனர்
இந்த நிலையில்தான் கருத்தமுத்து சீரியலிலிருந்து நீக்கப்பட்டுள்ளார் பிரேமி. தனது விலகல் குறித்து தனது பேஸ்புக் பக்கத்திலும் விளக்கியுள்ளார். அதில், நான் நடித்து வந்த பாத்திரத்தில் வேறு ஒரு நடிகையைப் போட்டுள்ளனர். நானாகத்தான் இந்தத் தொடரிலிருந்து விலகியதாக பலர் நினைக்கின்றனர். ஆனால் நான் விலகவில்லை. அவர்கள்தான் நீக்கி விட்டனர்.

2 மாதம் சும்மா இருந்தேன்
எனது காட்சிகளை காரணமே இல்லாமல் குறைத்தனர். இதனால் 2 மாதம் நான் வேலையில்லாமல் இருந்தேன். எனவேதான் குட்டிக்கலவரா நிகழ்ச்சியில் பங்கேற்றேன். இதையடுத்து என்னை அழைத்து கருத்தமுத்து சீரியலிலிருந்து நீக்க விட்டதாக தெரிவித்தனர்.

மூனுமணி
இருப்பினும் பிளவர்ஸ் டிவி எனக்கு கை கொடுத்துள்ளது. தங்களது மூனுமணி தொடரில் வாய்ப்பளித்துள்ளனர். என்னை தங்களது குடும்பத்தில் ஒருவராக நினைக்கும் பிளவர்ஸ் டிவிக்கு எனது நன்றிகள் என்று கூறியுள்ளார் பிரேமி.
சினிமாவில் பெரிய கலவரம் வரும் என்றால் டிவிகளில் குட்டிக்கலவரம் வரும் போல!
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications