Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஆசை ஆசையாக பெண்ணை நெருங்கி.. மொபைல் நம்பர் கேட்ட நபர்.. கடைசியில் ஹைகோர்ட் சொன்ன உத்தரவை பாருங்க

Subscribe to Oneindia Tamil

காந்தி நகர்: குஜராத் ஹைகோர்ட் வழங்கியிருக்கும் தீர்ப்பு ஒன்று, பலரது கவனத்தையும் தற்போது பெற்று வருகிறது. என்ன காரணம்?

ராஜஸ்தான் மாநில நீதிமன்றம் சமீபத்தில் ஒரு தீர்ப்பு வெளியிட்டிருந்தது.. இந்த சம்பவம் கடந்த 1991-ல் நடந்துள்ளது.. அங்குள்ள டோங்க் மாவட்டத்தை சேர்ந்தவர் சுவலால் என்பவருக்கு அப்போது 26 வயதாகியிருந்தது.

Gujarat Mobile Number Harassment

சிறுமி: வாட்டர் பூத் ஒன்றில் தண்ணீர் குடித்துக்கொண்டிருந்த 6 வயது சிறுமியை, ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு தூக்கி சென்று சிறுமியின் ஆடைகளை களைந்து நிர்வாணப்படுத்தி உள்ளார்.. அப்போது பயந்துபோன அந்த சிறுமி அலறவும், அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து, சிறுமியை மீட்டுவிட்டனர்.. பின்னர் தப்பியோடிய சுவலாலை கைது செய்யப்பட்டார்.

பின்னர் பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றதாக டோங்க் மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பளித்தது. மாவட்ட நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து சுலாவல், ராஜஸ்தான் ஹைகோர்ட்டில் அப்பீல் செய்தார்.

பலாத்காரம்: 33 ஆண்டுகளுக்கு முந்தைய வழக்கில், கடந்த மாதம் தீர்ப்பளிக்கப்பட்டது. இதில், சிறுமியின் உள்ளாடைகளை கழற்றி நிர்வாணப்படுத்துவது பாலியல் பலாத்கார முயற்சி கிடையாது. சட்டப்பிரிவு 376 மற்றும் 511 பிரிவுகளின் கீழ் இந்த குற்றச்சாட்டு வராது. பாலியல் பலாத்கார முயற்சி என்றால், அதையும் தாண்டி செய்திருக்க வேண்டும்.

அப்படி எதுவுமே இதில் நடக்கவில்லை என்பதால் ஐபிசி 354 என்ற அடிப்படையில் பெண்ணின் கண்ணியத்தை பாதித்தல் என்ற அடிப்படையில் தான் தண்டனை வழங்க முடியும். அதனால், குற்றம் சாட்டப்பட்ட நபர் மீது பாலியல் பலாத்கார முயற்சி வழக்குகளை ரத்து செய்து விட்டு மானபங்கப்படுத்துதல் பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டது.

உள்ளாடை: உள்ளாடையை கழற்றி நிர்வாணம் ஆக்குவது, பலாத்கார முயற்சி ஆகாது என்று ராஜஸ்தான் ஹைகோர்ட் அன்று தீர்ப்பு வழங்கியிருந்தது பெருத்த விவாதத்தை கிளப்பியிருந்தது.

இப்போது குஜராத் நீதிமன்றத்தில் நடந்த வழக்கில், மற்றொரு முக்கிய தீர்ப்பு வெளியாகியிருக்கிறது. சமீர் ராய் என்பவர், ஒரு பெண்ணிடம் செல்போன் நம்பரையும், அட்ரஸ் என்ன? என்றும் கேட்டாராம். இதனால் அதிர்ச்சி அடைந்த பெண், காந்திநகர் போலீசுக்கு சென்று, சம்பந்தப்பட்ட நபர் மீது புகார் தந்தார். தன்னுடைய செல்போன் நம்பரையும், முகவரியையும் கேட்கும் நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருந்தார்.

காந்திநகர் போலீசாரும் இந்த புகாரின் அடிப்படையில், சமீர் ராய் மீது கடந்த ஏப்ரல் 26ம் தேதி ஐபிசி சட்டத்தின் பிரிவு 354-A கீழ் எப்ஐஆர் பதிவு செய்தார்கள்.. அத்துடன் சமீர் ராயை கைது செய்து ஜெயிலிலும் அடைத்தனர்.. உடனே சமீர் ராய் இது தொடர்பாக குஜராத் ஹைகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

செல்போன் நம்பர்: இந்த வழக்கு நேற்றைய தினம் நீதிபதி நிர்சார் தேசாய் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது சமீர் ராய் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், "பெண்ணிடம் செல்போன் நம்பரை கேட்டதற்காக போலீஸார் பாலியல் வழக்கு பதிவு செய்திருக்கிறார்கள்.. அத்துடன், சமீரின் செல்போனை பிடிங்கி சில தகவல்களையும் அழித்திருக்கிறார்கள்.. இது தொடர்பாக கேள்வி கேட்டதால் சமீர் ராயையும் கடுமையாக தாக்கியிருக்கிறார்கள்" என்றார்.

பின்னர் இஇரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி நிர்சார் தேசாய், "யாராவது உங்கள் செல்போன் நம்பர் என்ன? என்று கேட்டால், அது உங்களை புண்படுத்தலாமே தவிர, அதுக்காக எப்ஐஆர் போடும் அளவுக்கு செல்ல தேவையில்லை.. எப்ஐஆர் போடும் அளவுக்கு அது அவ்வளவு பெரிய குற்றமுமில்ல.

குற்றமாகாது: அந்த பெண்ணிடம் இப்படி நம்பர் கேட்டது, இளைஞரின் பொருத்தமற்ற செயல் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.. ஆனால் ஐபிசியின் பிரிவு 354-ன் படி பார்த்தால், பாலியல் துன்புறுத்தல் தொடர்பான குற்றச்சாட்டில் வழக்கு தொடரும் அளவிற்கான குற்றமாகாது. எப்ஐஆர் உண்மை என்று நம்பப்பட்டாலும், முன்பின் தெரியாத பெண் ஒருவரிடம் பெயர், முகவரி போன்றவற்றை கேட்பது பொருத்தமற்ற செயல்... அது பாலியல் துன்புறுத்தலில் சேர்க்க முடியாது" என்று தெரிவித்திருக்கிறார் நீதிபதி.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+