ராஜ்தானி ரயிலில் இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை - ராணுவ வீரர் கைது
கவுகாத்தி: ராஜ்தானி ரயிலில் இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லைக் கொடுத்த ராணுவ வீரர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தில்ப்ருகர்-டெல்லி ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயிலின் ஏ.சி. வகுப்பு பெட்டியில் தனது உறவினருடன் சுமார் 17 வயது இளம்பெண் ஒருவர் பயணித்துக் கொண்டிருந்தார்.
இன்று அதிகாலை 4 மணியளவில் அசாம் மாநிலத்திலுள்ள லும்டிங் - சப்பர்முக் நிலையங்களுக்கு இடையே ரயில் சென்று கொண்டிருந்தது. அப்போது மேல்தட்டுப் படுக்கையில் படுத்து உறங்கிக் கொண்டிருந்த அப்பெண்ணிடம், அதே பெட்டியில் பயணம் செய்த மற்றொரு பயணி சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார்.
பதறியெழுந்த இளம்பெண் போட்ட கூச்சலால் அப்பெட்டியில் இருந்த மற்ற பயணிகள் அனைவரும் விழித்துக் கொண்டனர். சில்மிஷம் செய்த நபரை மடக்கிப் பிடித்த அவர்கள் கவுகாத்தி நிலைய ரயில்வே போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
அவரை கைது செய்த போலீசார் நடத்திய விசாரணையில், பிடிபட்ட நபரின் பெயர் குல்விந்தர் சிங் என்பதும், இந்திய ராணுவத்தில் பணியாற்றி வருவதும் தெரியவந்துள்ளது.
நாட்டைப் பாதுகாக்க வேண்டிய கடமையுணார்ச்சி கொண்ட ராணுவ வீரர் ஓடும் ரயிலில் இளம்பெண்ணிடம் சில்மிஷம் செய்தது ரயில் பயணிகளிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications