வழிதவறி வந்த குட்டி யானை.. காதை பிடித்து இழுத்து.. இரும்புக் கம்பியால் தாக்கிய கொடூர மக்கள்
குவாஹாட்டி: அசாமில் ஊருக்குள் நுழைந்த குட்டி யானையை அங்குள்ள மக்கள் துளி கூட இரக்கம் இல்லாமல் விரட்டி விரட்டி இரும்புக் கம்பியாலும், செருப்பாலும் அடித்த சம்பவம் வேதனையை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ள நிலையில், குட்டி யானையை கொடுமைப்படுத்தியவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என நெட்டிசன்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
தற்போது இந்த வீடியோவை ஆதாரமாக கொண்டு இந்த மோசமான செயலில் ஈடுபட்டவர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

குரூர மனிதர்கள்..
மனிதன் தனது சுயநலத்துக்காக எந்த எல்லைக்கும் செல்ல தயங்க மாட்டான் என்பதை நாம் அடிக்கடி நிரூபித்து வருகிறோம். மனித இனம் பெருகிக்கொண்டே வருவதால் நாம் நிம்மதியாக வாழவும், விசாலமாக சுற்றித்திரியவும் எண்ணற்ற காடுகள் அழிக்கப்பட்டுள்ளன. இன்னும் அழிக்கப்பட்டும் வருகின்றன. வீடு கட்டவும், கதவு செய்யவும் மரங்களை வெட்டுகிறோம். வளர்ச்சி என்ற பெயரில் கரியமில வாயுவை வெளியேற்றி இயற்கையை கெடுக்கிறோம். விலங்குகளின் வாழ்விடமான காட்டை ஆக்கிரமித்துக் கொண்டு, அவை இரை தேடி வந்தால் ஊருக்குள் விலங்கு வந்துவிட்டது என கூப்பாடு போட்டு அதை அடித்துக் கொல்கிறோம். இதனால்தான் விலங்குகள் - மனிதர்கள் மோதல் சம்பவம் தற்போது அதிகம் நடக்கிறது. விலங்குகளை கொடுமைப்படுத்திவிட்டு, அது ஊருக்குள் வந்து மனிதனை தாக்கிவிட்டது எனக் கூறுவதில் என்ன நியாயம் இருக்கிறது? இவ்வாறு மனிதனின் குரூரத்தை வெளிப்படுத்தும் ஒரு சம்பவம்தான் அசாமில் நடந்துள்ளது.

அடிக்கடி ஊருக்கு வரும் யானைகள்
அசாம் மாநிலம் ஹோஜாய் மாவட்டத்தில் உள்ளது ஷல்பாகன் கிராம். வனத்தை ஒட்டி அமைந்துள்ள இந்த கிராமத்துக்குள் உணவு தேடியும், குடிநீருக்காகவும் யானைகள் அடிக்கடி வருவது வழக்கம். இவ்வாறு வரும் யானைகள், அங்குள்ள வயல்வெளிகளில் இறங்கி பயிர்களை நாசம் செய்து விடுவதும் உண்டு. மேலும், கடந்த காலங்களில் யானைகள் தாக்கி அந்த கிராமத்தைச் சேர்ந்த மக்கள் உயிரிழந்தும் உள்ளனர். இதனால் இந்த கிராம மக்களுக்கு யானைகள் மீது ஒருவித வெறுப்பு ஏற்பட்டுள்ளது.

பயிர்களை நாசம் செய்தன..
இதனிடையே, கடந்த வாரம் 10 - 15 யானைகள் அந்த கிராமத்துக்குள் வந்து கரும்பு, சோளம் உள்ளிட்ட பயிர்களை சாப்பிட்டுள்ளன. இதனால் அங்குள்ள விவசாயிகளுக்கு பெருத்த நஷ்டம் ஏற்பட்டுள்ளது. பின்னர் ஊர் மக்களும், வனத்துறையினரும் சேர்ந்து அந்த யானைகளை காட்டுக்குள் விரட்டி விட்டனர். யானைகளின் இந்த அட்டகாசத்தால் கிராம மக்கள் கடும் வேதனையில் இருந்துள்ளனர்.

குட்டி யானை மீது தாக்குதல்
இந்நிலையில், காட்டுப் பகுதியில் தனது தாயை பிரிந்த குட்டி யானை வழித்தவறி அந்த கிராமத்துக்குள் வந்துவிட்டது. பிறந்து 6 மாதங்களே இருக்கும் அந்தக் குட்டி யானை, தனது தாயை தேடி அங்கும் இங்கும் சுற்றியுள்ளது. இதனை பார்த்துவிட்ட அந்த கிராம மக்கள், யானைகள் மீதான அவர்களின் கோபத்தை அந்தக் குட்டி யானை மீது காண்பிக்க தொடங்கினர். மிகவும் சிறிய அளவிலான அந்தக் குட்டியை, இரக்கமே இல்லாமல் இரும்புக் கம்பி, கட்டை, கல், செருப்பு ஆகியவற்றை கொண்டு மக்கள் தாக்கினர். ஏன் இவர்கள் நம்மை அடிக்கிறார்கள் என தெரியாத யானை, அவர்களிடம் இருந்து தப்பியோட முயற்சிக்கிறது. ஆனால், யானையை சூழ்ந்துகொண்ட இளைஞர்கள், அதனை எட்டி உதைத்தும், காதையும், தும்பிக்கையையும் பிடித்து தரதரவென இழுத்தும் அதனை அடிக்கின்றனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி லட்சக்கணக்கானோரின் கண்டனத்துக்கு உள்ளாகியுள்ளது. குட்டி என்றும் பாராமல் யானை மீது மூர்க்கத்தனத்தை காட்டியவர்களை கடுமையாக தண்டிக்க வேண்டும் எனவும் மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications