‛காப்பி பேஸ்ட் முதல்வர்’.. ட்ரோல் ஆன ஹிமந்த பிஸ்வா சர்மா! ‛ஆமா இங்கிலீஷ், இந்தி தெரியாது’ என பதிலடி
கவுஹாத்தி: அசாம் மாநில பாஜக முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா காப்பி அடித்த வீடியோ இணையதளங்களில் வெளியானது. இதையடுத்து ‛காப்பி பேஸ்ட்' முதல்வர் என அவரை நெட்டிசன்கள் கிண்டல் செய்தனர். இதையடுத்து ஹிமந்த பிஸ்வா சர்மா அவர்களுக்கு பதிலடி கொடுத்துள்ளது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
அசாமில் பாஜக ஆட்சி நடக்கிறது. முதல்வராக ஹிமந்த பிஸ்வா சர்மா முதல்வராக உள்ளார். இவர் தனது மனதில் கூறும் கருத்துகளை வெளிப்படையாக கூறுவதை வழக்கமாக வைத்துள்ளார். இதனால் அடிக்கடி சர்ச்சைகளிலும் சிக்கி வருகிறார்.

குறிப்பாக இஸ்லாமியர்கள் மற்றும் மசூதிகள் குறித்து சமீபத்தில் இவர் கூறிய கருத்துகள் விவாதத்தை கிளப்பின. அதாவது மாநிலத்தில் மதரசா பள்ளிகள் படிப்படியாக மூடப்படும். புதிய இந்தியாவில் மதரசா பள்ளிகள் தேவையில்லை என அவர் கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்நிலையில் தான் அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா தொடர்பான வீடியோ ஒன்று இணையதளங்களில் வெளியானது. அதாவது அசாமில் உள்ள பள்ளிக்கு விசிட்டுக்கு சென்ற ஹிமந்த பிஸ்வா சர்மா விசிட்டர் புத்தகத்தில் தனது கருத்தை பதிவு செய்வதாக அந்த வீடியோ பரப்பப்பட்டது. அதில் ஹிமந்த பிஸ்வா சர்மா அருகே பேப்பரில் எழுதி வைக்கப்பட்டு இருந்ததை பார்த்து விசிட்டர் புத்தகத்தில் எழுதினார்.
இதை பார்த்த நெட்டிசன்கள் ஹிமந்த் பிஸ்வா சர்மாவை கிண்டலடிக்க தொடங்கினர். ‛காப்பி பேஸ்ட்' முதல்வர் என அவரை சமூக வலைதளங்களில் ட்ரோல் செய்தனர். அதாவது அசாம் முதல்வர் ஹிமந்த் பிஸ்வா சர்மாவுக்கு விசிட்டர் புத்தகத்தில் ஒரு பாரா கூட சுயமாக எழுத தெரியவில்லை. அவர் காப்பி பேஸ்ட் மட்டுமே செய்கிறார் என பலரும் விமர்சனம் செய்தனர்.

இருப்பினும் ஒரு சிலரோ ஒவ்வொருவரும் தனது தாய் மொழியை விசிட்டர் புத்தக்கத்தில் பயன்படுத்தலாம். இதில் எந்த தவறும் இல்லை. ஹிமந்தா பிஸ்வாஸ் சர்மா தேவையின்றி பிற மொழியை காப்பி பேஸ்ட் செய்துள்ளார் என கூறினார். மேலும் இந்த விஷயத்தில் பாஜகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் இருதரப்பினருக்கும் இடையே வார்த்தை போர் நீடித்தது.
இதை பார்த்த ஹிமாந்த பிஸ்வா சர்மா தனது ட்விட்டர் பக்கத்தில், ‛‛நான் அசாமி மீடியம் பள்ளியில் படித்தேன். இந்தி மற்றும் இங்கிலீஷ் மொழியை சுயமாக கற்க தேவையான அனைத்தையும் செய்து வருகிறேன். எனக்கு இங்கிலீஷ் மற்றும் இந்தி நன்றாக தெரியாது என்பதை ஒப்புக்கொள்கிறேன். இதை ஒப்புக்கொள்வதில் எனக்கு எந்த தயக்கமும் இல்லை" என கூறியுள்ளார்.
இந்த பதிலை பார்த்த நெட்டிசன்கள் ஹிமந்த பிஸ்வா சர்மாவுக்கு ஆதரவாக கருத்துகள் பதிவிட்டு வருகின்றனர். பலரும், உயரிய பொறுப்பை அடைய மொழி என்றும் தடைக்கல்லாக இல்லை என கூறி தொடர்ந்து கருத்துகள் கூறி வருகின்றனர். மேலும் தனது குறையை வெளிப்படையாக ஒப்புக்கொண்டதற்கும், தெரியாத மொழியை கற்க முயற்சிக்கும் அவரது செயலையும் பாராட்டி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications