அஸ்ஸாமில் காங். படுதோல்வி! முதல்வர் தருண் கோகய் ராஜினாமா செய்வதாக அறிவிப்பு!!
Subscribe to Oneindia Tamil
குவஹாத்தி: அஸ்ஸாம் மாநிலத்தில் லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வியை சந்தித்ததால் அம்மாநில முதல்வர் தருண் கோகய் ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.

அஸ்ஸாம் மாநிலத்தில் மொத்தம் 14 லோக்சபா தொகுதிகளில் கணிசமான இடங்களை காங்கிரஸ் கைப்பற்றும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போதைய நிலவரப்படி அங்கு பாரதிய ஜனதாவே 7 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. அதற்கு அடுத்ததாக அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னனி 3 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.
காங்கிரஸ் கட்சியோ 3வது இடத்தில் 2 தொகுதிகளைக் கைப்பற்றும் நிலையில் இருக்கிறது. இதைத் தொடர்ந்து தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று தமது முதல்வர் பதவியை ராஜினாமா செய்வதாக தருண் கோகய் அறிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications