10-ஆம் வகுப்பு மாணவியுடன் காதல்... உல்லாசம்... அஸ்ஸாம் ஆசிரியர் கைது

Posted By:
Subscribe to Oneindia Tamil

குவஹாத்தி: அஸ்ஸாம் மாநிலத்தில் பள்ளி ஒன்றில் தன்னிடம் படிக்கும் சிறுமிகளுடன் நெருக்கமாக இருப்பது போன்ற புகைப்படத்தை வெளியிட்ட ஆசிரியர் ஒருவர் குழந்தைகள் பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

Assam teacher posts objectionable pictures with his female students | Oneindia News

அஸ்ஸாம் மாநிலத்தில் ஹைலகண்டி மாவட்டத்தில் உள்ள ஹைட்லிசேரா எனும் கிராமத்தில் உள்ள பள்ளியின் ஆசிரியர் ஃபெய்சுதீன் லஷ்கார் (46). இவர் தன்னிடம் பயிலும் மாணவிகளுடன் வகுப்பறையில் நெருக்கமாக இருப்பது போன்று புகைப்படம் எடுத்துள்ளார்.

Assam teacher arrested for posting intimate pictures with girls

அந்த புகைப்படங்களை சமூகவலைதளங்களில் வெளியிட்டுள்ளார். இதை பார்த்த பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் அவர் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீஸார் ஆசிரியரிடம் விசாரணை நடத்தினர். ஆனால் அவரை கைது செய்யவில்லை. இந்நிலையில் அஸ்ஸாம் மாநில குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் ஆசிரியர் மீது புகார் அளித்தது.

இது தொடர்பாக போலீஸார் ஆசிரியரிடம் நடத்திய விசாரணையில், அந்த மாணவியை ஃபெய்சுதீன் லஷ்கார் காதலிப்பதாகவும் திருமணம் செய்து கொள்வதாக கூறியுள்ளார். ஒரு கட்டத்தில் வகுப்பறையில் இருவரும் உல்லாசமாக இருந்துள்ளனர். இதனை சக மாணவியே புகைப்படமாக எடுத்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.

மாணவியின் காதல் விவகாரம் பெற்றோருக்கு தெரியவந்ததையடுத்து அந்த மாணவிக்கு வேறு ஒருவருடன் திருமணம் செய்ய ஏற்பாடு செய்திருந்தனர். இதையடுத்து தான் இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. ஆசிரியர் ஃபெய்சுதீன் லஷ்கார் பெண் குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
An Assam teacher who posted intimate pictures with girl students was arrested under child protection act.
Please Wait while comments are loading...