"உண்மை காதல்.." உயிரிழந்த காதலியை கரம் பிடித்த இளைஞர்.. அப்படியே கலங்கி போன நெட்டிசன்கள்! நெகிழ்ச்சி
திஸ்பூர்: அசாம் மாநிலத்தில் அரங்கேறியுள்ள ஒரு காதல் திருமணத்தின் வீடியோ, இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது. இது அனைவருக்கும் நெகிழ்ச்சியை ஏற்படுத்துவதாக அமைந்து உள்ளது.
எப்போதும் காதலுக்குக் கண் இல்லை என்று சொல்வார்கள். அதற்கேற்றார் போல மத, இன வேறுபாடுகளைத் தாண்டி, குறிப்பாக நாடுகளைக் கடந்தும் கூட காதல் மலர்ந்து நீங்கள் பார்த்து இருப்பீர்கள்!
ஆனால், அதையெல்லாம் மிஞ்சும் வகையில் அசாம் மாநிலத்தில் ஒரு காதல் கதை அரங்கேறி உள்ளது. இப்படியொரு காதலைக் கதையை நீங்கள் நிச்சயம் சினிமாவில் மட்டுமே பார்த்து இருப்பார்கள்.

வீடியோ
சமீபத்தில் இணையதளங்களில் வீடியோ ஒன்று பலராலும் பகிரப்பட்டு வந்தது. இதுதான் உண்மையான காதல் என்று கூறி, வீடியோவில் இருந்த அந்த இளைஞரைப் பலரும் பாராட்டி வருகின்றனர். உடல்நலக்குறைவால் உயிரிழந்த தனது நீண்ட நாள் காதலியையே இளைஞர் திருமணம் செய்து கொண்டு உள்ளார். காதலியின் சடலத்திற்கு அந்த ஆண் தாலி கட்டும் காட்சிகள் தான் இணையத்தில் வேகமாகப் பரவின.

உறுதிமொழிஉறுதிமொழி
இது அசாம் மாநிலம் கவுகாத்தியில் உள்ள தனியார் மருத்துவமனையில் நடந்ததாக்கச் சொல்லப்படுகிறது. தனது காதலியை உண்மையாக உருகி உருகிக் காதலித்ததாகத் தெரிவித்த அந்த இளைஞர், அவரைத் தவிர வேறு எந்தவொரு பெண்ணையும் தனது துணையாக ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் இனிமேல் வாழ்நாள் முழுவதும் திருமணம் செய்து கொள்ளாமல் சிங்கிளாகவே இருப்பேன் என்று இறந்த காதலி முன் உறுதி மொழி ஏற்றுக்கொண்டார்.

திருமணம்
உயிரிழந்த பின்னரும் காதலியைத் திருமணம் செய்து கொண்ட அந்த இளைஞர் 27 வயதான பிதுபன் தாமுலி என்று அடையாளம் காணப்பட்டு உள்ளது. அந்த வீடியோவில் அந்த இளைஞர் இறந்த காதலி பிராத்தனாவின் நெற்றியில் குங்குமத்தை வைக்கிறார். அதைத் தொடர்ந்து தரையில் சடலமாக இருக்கும் தனது காதலியின் கழுத்தில் வெள்ளை மாலையைப் போடுகிறார். பின் காதலியின் கையை எடுத்து மற்றொரு மாலையைத் தனது கழுத்தில் போட வைக்கிறார்.

காதல்
பிதுபன் மற்றும் பிராத்தனா பல ஆண்டுகளாகவே ஒருவரையொருவர் காதலித்து வந்தனர்.. இரு வீட்டாரின் குடும்பத்திற்கும் கூட இந்த காதல் குறித்துத் தெரியும். இரு வீட்டாரும் அவர்களின் காதலுக்கு ஒப்புதல் தெரிவித்து இருந்தனர். மேலும் அவர்களுக்குத் திருமணம் செய்து வைக்க நடவடிக்கையும் எடுத்தனர். இருப்பினும், அதற்குள் யாருமே எதிர்பார்க்காத வகையில் பிரார்த்தனா உயிரிழந்துவிட்டார்.

உறவினர்கள்
இது தொடர்பாக அவர்களின் உறவினர்கள் கூறுகையில், "நாங்கள் இருவருக்கும் திருமணம் செய்து வைக்க முடிவு செய்திருந்தோம். இதற்கான ஏற்பாடுகளைத் தொடங்க இருந்தோம். இருப்பினும், திடீரென யாரும் எதிர்பார்க்காத விதமாக பிராத்தனாவுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து கவுஹாத்தியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவரை அனுமதித்தோம். எவ்வளவோ முயன்றும் கூட அவரை மருத்துவர்களால் காப்பாற்ற முடியவில்லை.

நெகிழ்ச்சி
இதனால் கடந்த வெள்ளிக்கிழமை மாலை அவர் பரிதாபமாக உயிரிழந்தார். மருத்துவமனைக்கு வந்த பிதுபன், பிராத்தனாவை திருமணம் செய்து கொள்ளப் போவதாக அறிவித்தார். எங்களுக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை. ஏனென்றால் இப்படியெல்லாம் நடக்கும் என நாங்கள் கனவிலும் நினைக்கவில்லை. பிராத்தனாவை அவர் இந்தளவுக்குக் காதலிப்பார் என்று எங்களுக்குத் தெரியாமல் போய்விட்டது" என்றார்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications