ஜம்மு - காஷ்மீர் உள்ளிட்ட 4 மாநில சட்டமன்றத் தேர்தல் தேதி இன்று அறிவிப்பு?
டெல்லி: ஜம்மு - காஷ்மீர், அரியான, மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட், நான்கு மாநில சட்டமன்றங்களுக்குக்கான தேர்தல் தேதி இன்று அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த 4 மாநில சட்டமன்ற தேர்தலையும் 2 கட்டமாக நடத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டு உள்ளது.

ஜம்மு - காஷ்மீர் உள்ளிட்ட நான்கு மாநில சட்டமன்ற தேர்தலை ஒரே கட்டமாக நடத்தப்படும் என செய்திகள் வெளியாகின ஆனால் பாதுகாப்பு காரணங்களுக்காக 2 கட்டங்களாக தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் முடிவுசெய்துள்ளது.
ஹரியானா சட்டமன்றத்தின் பதவிக்காலம் வருகின்ற அக்டோபர் 27 ஆம் தேதியும், மகாராஷ்ட்ரா சட்டமன்றத்தின் பதவிக்காலம் நவம்பர் 8 ஆம் தேதியும் முடிவுக்கு வருகிறது.
இதேபோல், ஜார்கண்ட் சட்டமன்றத்தின் பதவிக்காலம் வருகின்ற ஜனவரி 3 ஆம் தேதியும், ஜம்மு காஷ்மீர் சட்டமன்றத்தின் பதவிக்காலம் ஜனவரி 19 ஆம் தேதியும் முடிவடைகிறது. இதையடுத்து, இந்த நான்கு மாநிலங்களிலும் தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்து வருகிறது.
மகாராஷ்டிரா மற்றும் அரியானா மாநிலங்களுக்கு முதற்கட்டமாகவும் ஜம்மு - காஷ்மீர் மற்றும் ஜார்க்கண்ட் மாநிலங்களுக்கு அடுத்தகட்டமாகவும் தேர்தல் நடைபெறுகிறது.
ஜம்மு - காஷ்மீர், ஜார்க்கண்ட் டிசம்பர் மாதமும் அரியான, மகாராஷ்டிரா மாநிலங்களுக்கு அக்டோபர் மாதமும் வாக்கு பதிவு நடைபெறலாம் என்று கூறப்படுகிறது.
காஷ்மீரில் பனிக்காலம் தொடங்குவதாலும், ஜார்கண்டில் மழைக்காலம் வருவதாலும், அங்கு பாதுகாப்புப் படைகளை அனுப்புவது பற்றியும், தொடர்ச்சியாக வரும் பண்டிகைகள், மத்திய பாதுகாப்பு படைகளை வெவ்வேறு இடங்களுக்கு அனுப்புவது ஆகியவற்றை கருத்தில் கொண்டு ஹரியானா, மகாராஷ்ட்ரா மாநில தேர்தல் தேதிகள் முடிவு செய்யப்படும் என தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எனினும் தேர்தல் தேதிகள் இன்று அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை












Click it and Unblock the Notifications