For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஹரித்வார் தொடங்கி.. நாடு முழுவதும்.. 100 ஆறுகளில் கரைக்கப்படும் வாஜ்பாய் அஸ்தி!

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

டெல்லி: ஹரீத்துவார் தொடங்கி 100 ஆறுகளில் வாஜ்பாயின் அஸ்தி கரையவுள்ளது.

பாரத ரத்னா விருது பெற்ற அடல் பிகாரி வாஜ்பாய் கடந்த 9 வாரங்களாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவர் கடந்த 16-ஆம் தேதி காலமானார். அவருக்கு வயது 93.

Atal Bihari Vajpayees ashes to be immersed in 100 rivers

இதையடுத்து அவரது உடல் முழு அரசு மரியாதையுடன் 17-ஆம் தேதி விஜய் கோட்டில் தகனம் செய்யப்பட்டது. இந்நிலையில் அவரது அஸ்தியை இந்தியா முழுவதும் உள்ள 100 ஆறுகளில் கரைக்கப்படுகிறது.

அதன் ஒரு பகுதியாக ஹரித்துவாரில் அஸ்தி கரைக்கும் நிகழ்ச்சி தொடங்குகிறது. இந்த நிகழ்ச்சியில் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், உத்தரகாண்டை சேர்ந்த திரிவேந்திர சிங் ராவத் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.

உத்தரப்பிரதேசம், ஆந்திரம், குஜராத், ஒடிஸா, மேற்கு வங்கம், பஞ்சாப், தெலுங்கானா உள்ளிட்ட இடங்களில் உள்ள புனித ஆறுகளில் கரைக்கப்படுகிறது.

English summary
Former PM Atal Bihari Vajpayee's ashes to be immersed in 100 rivers.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X