வாஜ்பாய் கவலைக்கிடம்.. பாஜகவின் அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து
Recommended Video

டெல்லி: முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ள நிலையில் பாரதிய ஜனதா கட்சி தனது அனைத்து நிகழ்ச்சிகளையும் ரத்து செய்துள்ளது.
டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் ஜூலை 11-ஆம் தேதி முதல் வாஜ்பாய் சிகிச்சை பெற்று வருகிறார். சிறுநீரக நோய் தொற்று காரணமாக அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிறுநீரக நோய்த்தொற்று, நெஞ்சக அடைப்பு பாதிப்பு போன்றவை இன்னும் தீரவில்லை. எனவே வாஜ்பாய் உடல்நிலை மிக மோசமான நிலையில் உள்ளதாக மருத்துவமனை இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் பாரதிய ஜனதா கட்சியின் அனைத்து நிகழ்ச்சிகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. வரும் 20ம் தேதி குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு பதவியேற்று ஓராண்டு நிறைவையொட்டி புத்தக வெளியீடு நிகழ்ச்சி நடத்தவும், அதில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கும் திட்டமிடப்பட்டிருந்தது. அந்த நிகழ்ச்சியும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இதனிடையே பாஜக மூத்த தலைவர் அத்வானியின் மகள் பிரதீபா அத்வானி, இன்று, எய்ம்ஸ், மருத்துவமனைக்கு வந்து வாஜ்பாய் உடல்நலம் விசாரித்தார். இதேபோல உத்திர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் மற்றும் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் ராகுல் காந்தி ஆகியோரும் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு சென்று மருத்துவர்களிடம் வாஜ்பாய் உடல் நலம் குறித்து கேட்டறிந்தனர்.
டெல்லியில், வாஜ்பாய் வீடு அமைந்துள்ள பகுதியில் போக்குவரத்துக்கு தடை செய்யப்பட்டுள்ளது.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications