முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் எம்.ஏ. பட்டம் எங்கே?
ஆக்ரா: முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் எம்.ஏ. பட்டம் வாங்கியதற்கான ஆதாரங்களை பீம் ராவ் அம்பேத்கர் பல்கலைக்கழகம் தவறவிட்டுள்ளதாம்.
முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் வாழ்க்கை குறித்து இணை அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆவணப்படம் ஒன்றை எடுத்து வருகிறார். அதற்காக அவர் வாஜ்பாய் எம்.ஏ. பட்டத்தை 1946 ஆண்டிலா அல்லது 1947ம் ஆண்டிலா பெற்றார் என்பதை அவரது குடும்பத்தாரிடம் கேட்டுள்ளார்.

இது குறித்து வாஜ்பாயின் உறவினரும், அவர் படித்த பீம் ராவ் அம்பேத்கர் பல்கலைக்கழக ஊழியையுமான நிர்மலா தீக்சித் கூறுகையில்,
வாஜ்பாய் அரசியல் அறிவியலில் எம்.ஏ. பட்டம் பெற்ற ஆண்டை அறிய நிர்மலா சீதாராமன் என்னை அணுகினார். நான் அம்பேத்கர் பல்கலைக்கழக அதிகாரிகளை தொடர்பு கொண்டு விவரங்களை கேட்டேன். ஆனால் கேட்டு 7 மாதங்கள் ஆகியும் அவர்களால் அவரின் பட்ட விவரங்கள் குறித்த ஆவணங்களை கண்டுபிடிக்க முடியவில்லை. வாஜ்பாய் கான்பூரில் உள்ள டிஏவி கல்லூரியில் படித்ததால் அதற்கான விவரங்களை அவர்கள் சத்ரபதி சிவாஜி சாஹுஜி மகாராஜ் பல்கலைக்கழத்திற்கு மாற்றிவிட்டதாக தெரிவித்தார்கள் என்றார்.
ஆனால் அப்படி எந்த தகவல்களும் தங்களிடம் அளிக்கப்படவில்லை என்று சத்ரபதி சிவாஜி பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
வாஜ்யாய் எம்.ஏ. படித்ததற்கான ஆதாரங்கள் தங்களிடமும் இல்லை என்று கான்பூர் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. 1900களின் துவக்கத்தில் உத்தர பிரதேசத்தில் உள்ள அனைத்து கல்லூரிகளும் பீம் ராவ் அம்பேத்கர் பல்கலைக்கழகத்தின் கீழ் இருந்தன. அதன் பிறகு 1927ம் ஆண்டு ஆக்ரா பல்கலைக்கழகம் துவங்கப்பட்ட உடன் கான்பூரில் உள்ள டிஏவி கல்லூரி உள்ளிட்ட பல கல்லூரிகள் இந்த பல்கலைக்கழகத்தின் கீழ் வந்தன. பின்னர் ஆக்ரா பல்கலைக்கழகம் சத்ரபதி சிவாஜி பல்கலைக்கழகம், லக்னோ பல்கலைக்கழகம் உள்ளிட்ட 10 பல்கலைக்கழகங்களாக பிரிக்கப்பட்டது என்பது குறிப்பிடப்பட்டது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications