ஐ.எஸ் பயங்கரவாத இயக்கத்துடன் தொடர்பு.. பெண் உள்பட 4 பேர் குஜராத்தில் அதிரடி கைது
அகமதாபாத்: குஜராத்தில் ஐ.எஸ் பயங்கரவாத இயக்கத்துடன் தொடர்பில் இருந்து கொண்டு அந்த இயக்கத்தில் சேர திட்டமிட்டு இருந்த பெண் உள்பட 4 பேரை பயங்கரவாத தடுப்பு படை அதிரடியாக கைது செய்துள்ளது.
சிரியாவில் இருந்து செயல்படும் தீவிரவாத இயக்கம் ஐ.எஸ். இந்த பயங்கரவாத அமைப்பு சமூக வலைத்தளங்கள் மூலமாகவும் தங்கள் அமைப்புக்கு ஆட்களை திரட்டி வருகிறது. ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்தினால் ஈர்க்கப்படும் அதன் ஆதரவாளர்கள் சிலர் தனி நபர் தாக்குதல்களிலும் ஈடுபடுகின்றனர். குறிப்பாக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இதுபோன்ற தாக்குதல்கள் அவ்வப்போது நடந்து வருகின்றன.
இத்தகைய தாக்குதல்கள் உலகம் முழுவதையும் அதிர வைத்து வருகிறது. ஐ.எஸ் இயக்கத்துடன் தொடர்பு உள்ளவர்கள் மற்றும் அந்த இயக்கத்தின் அனுதாபிகள் குறித்து இந்தியாவிலும் உளவு அமைப்புகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றன. இந்த நிலையில், குஜராத்தின் கடற்கரை நகரமான போர்பந்தரில் ஐ.எஸ் பயங்கரவாதிகளுடன் தொடர்பில் இருந்த 4 பேரை பயங்கரவாத தடுப்பு பிரிவு அதிரடியாக கைது செய்துள்ளது.

ஐ.எஸ் பயங்கரவாத ஆதரவு குழுவில் இந்த நான்கு பேரும் அங்கம் வகித்ததோடு, அவ்வப்போது ஒருவருக்கொருவர் தொடர்பில் இருந்துள்ளனர். இந்த நான்கு பேரும் நாட்டை விட்டு தப்பி ஓடி ஐ.எஸ் பயங்கராவாத இயக்கத்தில் சேரும் திட்டத்துடன் கடந்த ஒராண்டாக இருந்துள்ளனர். இது தொடர்பாக ரகசிய தகவல் குஜராத் பயங்கரவாத தடுப்பு படை பிரிவுக்கு கிடைத்தது.
இதையடுத்து ரகசியமாக கண்காணித்து வந்த பயங்கராவத தடுப்பு படை, அவர்கள் நான்கு பேரையும் அதிரடியாக கைது செய்தது. அதில் ஒரு பெண்ணும் அடங்குவார். இவர்களுடன் தொடர்புடைய மேலும் ஒரு வெளிநாட்டு நபருக்கு சொந்தமான இடங்களில் ஏடிஎஸ்(பயங்கரவாத தடுப்பு படை) தீவிர சோதனை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கைதான நபர்களிடம் இருந்து தடை செய்யப்பட்ட பல பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு இருப்பதாகவும் குஜராத் பயங்கரவாத தடுப்பு படை தெரிவித்துள்ளது. குற்றம் சாட்டப்பட்ட நான்கு பேரையும் பாகிஸ்தானில் இருந்து ஒருவர் இயக்கி வந்ததாகவும் தகவல்கள் கூறுகின்றன.
கடந்த சில தினங்களுக்கு முன்புதான் ஐ.எஸ் பயங்கரவாத இயக்கத்துடன் தொடர்பு உள்ளதாக சந்தேகிக்கப்பட்ட நபர்கள் 3 பேரை குஜராத் பயங்கரவாத தடுப்பு படை கைது செய்து இருந்தது. இந்த நிலையில், மீண்டும் குஜராத்தில் ஐ.எஸ் பயங்கரவாத இயக்கத்துடன் தொடர்பில் இருந்தவர்கள் கைது செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
விஜய்க்கு எதிராக பெரம்பூர், திருச்சியில் கிழக்கில்.. களமிறங்கும் திமுக, அதிமுக வேட்பாளர்கள் யார்? -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
அரசியலன்னா இதுதான்.. எப்போ என்ன நடக்கும்னே தெரியாது.. ஸ்டாலின் டிக் அடித்த பெயர்.. பலர் ஷாக் -
இதுவரை திமுக ஜெயிக்காத.. கோவை தெற்கு தொகுதியைத் கேட்டு வாங்கிய செந்தில் பாலாஜி.. என்ன காரணம்? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
ஜெயலலிதா ஸ்டைலை பின்பற்றும் விஜய்! ‘டபுள் தொகுதி’ ஃபார்முலாவை கையில் எடுத்தது ஏன்? இதுவரை யார் யார்? -
திமுக தேர்தல் அறிக்கை LIVE: மகளிர் உரிமை தொகை, புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் தொகை உயர்வு! -
மத்தி, சென்னையை கிளீன் ஸ்வீப் செய்யும் திமுக! தெற்கு, வடக்கில் ட்விஸ்ட்! அப்போ அரியணை? வெளியான சர்வே -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
விஜய்க்கு சத்தமின்றி எடப்பாடி வைத்த செக்.. சம்பவம் பண்ணிட்டாரே.. ஸ்டாலினும் விடலையே.. கேம் ஓவர்? -
பெரம்பூர், திருச்சி கிழக்கு தொகுதிகளில் சி. ஜோசப் விஜய்.. 2 தொகுதிகளில் போட்டியிடும் தவெக தலைவர்!












Click it and Unblock the Notifications