அவதார் நகைக் கடைகள் மூடல்? பிராண்ட் அம்பாசிடர் மம்முட்டிக்கு சிக்கல்?
திருவனந்தபுரம்: கேரளாவில் உள்ள அவதார் தங்க நகைக்கடைகள் வாடிக்கையாளர்களிடம் பணத்தை வாங்கிவிட்டு கடைகளை மூடிவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் நடிகர் மம்மூட்டிக்கு பிரச்சனை ஏற்படுமோ என ரசிகர்கள் கவலை அடைந்துள்ளனர்.
கேரள மாநிலம் திருச்சூரில் அவதார் தங்கம் மற்றும் வைர நகை மாளிகை உள்ளது. அந்த கடையின் பிராண்ட் அம்பாசிடராக இருப்பவர் நடிகர் மம்மூட்டி. கடையை திறந்து வைத்தவரே அவர் தான். மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் கிளைகள் உள்ளது.

வாடிக்கையாளர்கள் பலர் அந்த நகைக்கடைகளில் தங்கத் திட்டங்களில் முதலீடு செய்துள்ளனர். பலர் நகை வாங்க மாதாமாதம் பணம் செலுத்தி வந்துள்ளனர். இந்நிலையில் அந்த கடைகள் திடீர் என மூடப்பட்டுவிட்டதாக உள்ளூர் ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.
உரிமையாளர் வாடிக்கையாளர்களின் பணத்தோடு எஸ்கேப் ஆகிவிட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடையின் பிராண்ட் அம்பாசிடரான மம்மூட்டிக்கு பிரச்சனை வருமோ என அவரின் ரசிகர்கள் சமூகவலைதளங்களில் தங்களின் கவலையை தெரிவித்துள்ளனர்.
முன்னதாக மேகி நூடுல்ஸ் பிரச்சனை ஏற்பட்டபோது ஒரு காலத்தில் அந்த விளம்பரத்தில் நடித்த அமிதாப் பச்சன் மீது வழக்கு தொடரப்பட்டது. அது போன்று மம்மூட்டிக்கும் பிரச்சனை வந்துவிடுமோ என ரசிகர்கள் கவலையில் உள்ளனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications