பல நாடுகளில் கொரோனாவை எதிர்த்து போராட யோகா உதவுகிறது - ஆயுஷ் அமைச்சர் ஸ்ரீபாட் நாயக்
யோகா பயிற்சி செய்பவர்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்படும் வாய்ப்பு மிகக்குறைவு என்று மத்திய ஆயுஷ் அமைச்சர் ஸ்ரீபாட் நாயக் கருத்துத் தெரிவித்துள்ளார். பல நாடுகளில் கொரோனாவை எதிர்த்து போராட யோகா உதவுகிறது என்றும் அவர் தெரிவித
பனாஜி : கொரோனா வைரசுக்கு எதிராக போராட யோகா உதவி செய்வதாக மத்திய ஆயுஷ் அமைச்சர் ஸ்ரீபாட் நாயக் கருத்துத் தெரிவித்துள்ளார். யோகா பயிற்சி செய்பவர்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்படும் வாய்ப்பு மிகக்குறைவு என்றும் பல நாடுகளில் கொரோனாவை எதிர்த்து போராட யோகா உதவுகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார். ஆயுஷ் 64 மருந்தை அறிமுகம் செய்து வைத்து பேசிய அமைச்சர் இதனை கூறியுள்ளார்.
இந்தப் பிரச்சாரம் நிச்சயம் கொரோனா வைரஸுக்கு எதிரான போரில் மிகப்பெரிய அளவில் சிறப்பாகச் செயல்படத் துணை புரியும். யோகா கலையை யாரெல்லாம் பயிற்சி செய்து வருகிறார்களோ அவர்கள் கரோனா வைரஸால் பாதிக்கப்படும் வாய்ப்பு மிகக்குறைவாகும்.

கடந்த 1980ஆம் ஆண்டு மலேரியாவின் சிகிச்சைக்காக உருவாக்கப்பட்ட ஆயுஷ்-64 என்ற பல்வேறு மூலிகைகள் கலந்த மருந்து, கோவிட்-19 சிகிச்சைக்கு ஏற்றவாறு தற்போது மாற்றி உருவாக்கப்பட்டு, பெருந்தொற்று காலகட்டத்தில் வல்லுநர்களுக்கு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.
யோகா கலையைத் தொடர்ந்து செய்வதன் மூலம் நம்முடைய உடலின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து, நுரையீரல், சுவாசக் குழாய் வலுவடையும். குறிப்பாக நுரையீரலைப் பாதிக்கும் கரோனா வைரஸை எதிர்க்க யோகா மிகவும் பயன்படும் என்று மத்திய ஆயுஷ் அமைச்சர் ஸ்ரீபாட் நாயக் தெரிவித்தார்.
பிரதமர் நரேந்திர மோடியின் அரசாங்கம் ஏழு ஆண்டுகளுக்கு முன்பு ஜூன் 21ஆம் தேதி சர்வதேச யோகா தினத்தை கொண்டாடத் தொடங்கியது, இதன் காரணமாக யோகா குறித்த விழிப்புணர்வு ஏற்பட்டது என்று கோவா முதல்வர் பிரமோத் சாவந்த் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் பேசிய நாயக் தெரிவித்துள்ளார்.
இப்போது, பல நாடுகள் யோகா மூலம் கொரோனா வைரஸை எதிர்த்து போராட முடியும் என்பதை அங்கீகரித்து வருகின்றன, ஏனெனில் அதன் நன்மைகள் பிரச்சாரம் செய்யப்பட்டு அவர்களுக்கு விளக்கப்பட்டதாகவும் மத்திய அமைச்சர் கூறினார்.
மனித வாழ்க்கையின் உடல், மன மற்றும் ஆன்மீக அம்சங்களை மையமாகக் கொண்ட பண்டைய நடைமுறையைப் பற்றிய அறிவை உலகம் முழுவதும் பரப்பிய தொலைநோக்குத் தலைவராக பிரதமர் மோடி திகழ்வதாகவும் ஆயுஷ் அமைச்சர் புகழாரம் சூட்டினார்.












Click it and Unblock the Notifications