எரிக்கவும் - புதைக்கவும் இல்லை..அயோத்தி ராமர் கோவில் தலைமை பூசாரி உடலில் கல்லை கட்டி ஆற்றில் வீச்சு
அயோத்தி: அயோத்தி ராமர் கோவில் தலைமை பூசாரி மகாந்த் சத்யேந்திர தாஸ் உடல்நலக்குறைவால் காலமானார். இதையடுத்து அவரது உடல் புதைக்கப்படவில்லை. அதேபோல் அவரது உடல் தகனம் செய்யப்படவில்லை. மாறாக சரயு ஆற்றில் கல்லை கட்டி ஜலசமாதி செய்தனர். அதன் பின்னணி பற்றி புதிய தகவல் வெளியாகி உள்ளது.
நீண்ட கால சட்டப்போராட்டத்துக்கு பிறகு உச்சநீதிமன்ற தீர்ப்பை தொடர்ந்து உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் புதிதாக ராமர் கோவில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.

இந்த கோவில் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் திறக்கப்பட்டது. பிரதமர் மோடி இந்த கோவில் கும்பாபிேஷக விழாவில் பங்கேற்று திறந்து வைத்தார். அயோத்தி ராமஜென்மபூமி கோவிலின் தலைமை பூசாரி மஹந்த் சத்யேந்திர தாஸ் செயல்பட்டு வந்தார். இவருக்கு 85 வயது.
இந்நிலையில் தான் வயது முதிர்வு காரணமாக மஹந்த் சத்யேந்திர தாஸ் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டார். இதையடுத்து அவர் லக்னோவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மூளை பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
மருத்துவமனையில் மஹந்த் சத்யேந்திர தாஸ்க்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி மஹந்த் சத்யேந்திர தாஸ் உயிரிழந்தார். 1992ம் ஆண்டில் பாபர் மசூதி இடிப்பின்போது ராமர் கோவிலின் பூசாரியாக மஹந்த் சத்யேந்திர தாஸ் செயல்பட்டு வந்தார். அதன்பிறகு அந்த வளாகத்தை அரசு கைப்பற்றியபோது அவர் தலைமை பூசாரியாக நியமிக்கப்பட்டு தொடர்ந்து செயல்பட்டு வந்த நிலையில் நேற்று முன்தினம் காலமானார்.
இதையடுத்து அவரது உடல் பாலன்குயினில் உள்ள இல்லத்தில் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அங்கு கோவில் நிர்வாகிகள், இந்து அமைப்பினர், பாஜக நிர்வாகிகள் அஞ்சலி செலுத்தினர். அதன்பிறகு அவரது உடல் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு சரயு ஆற்றில் ஜல சமாதி செய்யப்பட்டது. துளசிதாஸ் காட் பகுதியில் ஓடும் சரயு ஆற்றின் நடுப்பகுதிக்கு அவரது உடல் எடுத்து செல்லப்பட்டது. அங்கு உடலில் கல்லை கட்டி படகில் இருந்து சரயு ஆற்றுக்குள் தள்ளிவிடப்பட்டது. இப்படியாக அவரது உடல் ஜல சமாதியாக்கப்பட்டது.
இதுபற்றி அயோத்தி கோவிலின் புதிய தலைமை பூசாரி பிரதீப் தாஸ் கூறுகையில், ‛‛ராமானந்தி பிரிவில் மரபு ஒன்று பின்பற்றப்பட்டு வருகிறது. அந்த மரபின்படி மஹாந்த் சத்யேந்திர தாஸின் உடல் சரயு ஆற்றில் ஜலசமாதி செய்யப்பட்டுள்ளளது. உடலில் கல்லை கட்டி ஜலசமாதி முறை நிறைவேற்றப்பட்டுள்ளது’’ என்றார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications