Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

‛வாவ்’ சொல்ல வைக்கும் அயோத்தி ராமர் கோவில்.. பக்தர்களுக்கு இவ்வளவு வசதிகளா? ஸ்பெஷல் போட்டோக்கள்

Subscribe to Oneindia Tamil

அயோத்தி: அயோத்தி ராமர் கோவில் 2024 ஜனவரி மாதம் 22ம் தேதி திறக்கப்பட உள்ளது. ஆன்மிக சுற்றுலா தலத்தின் அடையாளமாக அயோத்தி ராமர் கோவிலை மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வரும் நிலையில் ‛ஒன் இந்தியா' நேரடியாக கள ஆய்வு செய்த நிலையில் அங்கு பக்தர்களுக்கு செய்யப்பட்டுள்ள வசதிகளை போட்டோக்களுடன் சேகரித்துள்ளது.

அயோத்தி... உத்தர பிரதேச மாநிலத்தில் அமைந்துள்ள புனித நகரம். 1853ம் ஆண்டு வரை அமைதியாக இந்த நகரத்தில் திடீரென்று பூதம் ஒன்று கிளம்பியது. அதாவது அவாத்தின் நவாப் வாஜித் ஷாவின் ஆட்சி நடந்து கொண்டிருந்த சமயம் அது.

Ayodhyas Ram Temple Set to Redefine Spiritual Tourism and focus on providing all specilities to devotees

அப்போது தான் இந்து அமைப்புகளை சேர்ந்தவர்கள் ஒரு வாதத்தை முன்வைத்தனர். அதாவது அயோத்தியில் இருந்த ராமர் கோவில் முகலாய ஆட்சியாளரான பாபர் காலத்தில் இடிக்கப்பட்டு பாபர் மசூதி கட்டப்பட்டதாக இந்து அமைப்பினர் கூறினர். இது பிரளயத்தை ஏற்படுத்தியது.

இதையடுத்து இந்து அமைப்பினர் நீதிமன்றங்களில் வழக்குகள் தொடர்ந்தனர். விஷ்வ ஹிந்து பரிஷத் அயோத்தியில் பாபர் மசூதி இருக்கும் இடத்தில் ராமர் கோவில் கட்ட வேண்டும் என்ற கோரிக்கையை முன்னெடுத்தது. அதோடு பைசாபாத் நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கும்போதே பாபர் மசூதியையொட்டிய இடத்தில் ராமர் கோவிலுக்கு அடிக்கல் நாட்டியது. இதையடுத்து இந்த வழக்கு உத்தர பிரதேச மாநில உயர்நீதிமன்றத்தின் சிறப்பு அமர்வுக்கு மாற்றப்பட்டது.

இதையடுத்து பாஜக தலைவர் எல்கே அத்வானி தலைமையில் கடந்த 1990ம் ஆண்டில் அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கான ரத யாத்திரை தொடங்கப்பட்டது. இந்த ரதயாத்திரை குஜராத் மாநிலம் சோம்நாத்தில் இருந்து தெடாங்கியது. இந்த யாத்திரையின்போது கலவரங்கள் வெடித்தன. விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினர் பாபர் சமாதியை சேதப்படுத்தினர். இதையடுத்து கடந்த 1991ல் உத்தர பிரதேசத்தில் பாஜக ஆட்சி அமைந்தது.

Ayodhyas Ram Temple Set to Redefine Spiritual Tourism and focus on providing all specilities to devotees

1992 டிசம்பர் மாதம் 6ம் தேதி பாபர் மசூதிகளில் இடிக்கப்பட்டது. இதையடுத்து இந்து-முஸ்லிம்கள் இடையே கலவரம் வெடித்தது. நாடு முழுவதும் பல இடங்களில் கலவரம் வெடித்தது. சுமார் இரண்டாயிரத்துக்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டனர். இந்த பதற்றம் என்பது தொடர்ந்து நீடித்து வந்தது. இத்தகைய சூழலில் தான் 1998 ல் மத்திய பாஜக கூட்டணி ஆட்சி அமைந்தது. பாஜக தலைவர் வாஜ்பாய் பிரதமராக பொறுப்பேற்றார். அயோத்தி ராமர் கோவில் பிரச்சனையை தீர்க்க சத்ருகன் சின்ஹா தலைமையில் இந்து மற்றும் முஸ்லிம் தலைவர்கள் இடையே அமைதி பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

ஆனால் பிரச்சனையில் வீரியம் குறையவில்லை. 2002 உத்தர பிரதேச சட்டசபை தேர்தலின்போது பாஜக தனது தேர்தல் வாக்குறுதியில் அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்படும் என அறிவித்தது. அதன்பிறகு தான் குஜராத் கோத்ராவில் ரயில் எரிப்பு சம்பவம் நடந்தது. 58 பேர் கொல்லப்பட்ட நிலையில் அதன்பிறகு கலவரம் வெடித்தது. இதையடுத்து உயர்நீதிமன்றம் சர்வே பணிக்கு உத்தரவிட்டது. 2003ல் முதல் முதலாக மசூதியின் அடியில் கோவில் இருந்ததற்கான ஆதாரங்கள் இருப்பதாக சர்வே தெரிவித்தது.

இதையடுத்து உயர்நீதிமன்றத்தை கடந்த உச்சநீதிமன்றத்துக்கு இந்த வழக்கு சென்றது. உச்சநீதிமன்றம் கடந்த 2019 ம் ஆண்டு நவம்பர் மாதம் தீர்ப்பு வழங்கியது. 5 நீதிபதிகள் அடங்கிய அமர்வு அயோத்தியில் ராமர் கோவில் கட்ட உத்தரவு பிறப்பித்தது. அதோடு அரசு சார்பில் சன்னி வக்பு வாரியத்துக்கு மசூதி கட்ட 5 ஏக்கர் நிலம் வழங்க வண்டும் என உத்தரவு பிறப்பித்தது. இதன்மூலம் நூறாண்டுக்கும் மேலாக நீடித்த அயோத்தி சர்ச்சைக்குரிய இடம் தொடர்பான பிரச்சனை என்பது முடிவுக்கு வந்தது.

இதையடுத்து அயோத்தியில் ராமர் கோவிலை பிரமாண்டமாக கட்ட முடிவு செய்யப்பட்டது. கோவில் கட்டும் பணிக்காக ஸ்ரீ ராம் ஜென்மபூமி தீர்த்த சேத்ரா அறக்கட்டளை உருவாக்கப்பட்டது. 2020 ஆகஸ்ட் மாதம் ராமர் கோவில் கட்ட பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். இதையடுத்து பணிகள் விரைவாக தொடங்கின. மொத்தம் ரூ.1000 கோடி செலவில் பிரமாண்டமாக கோவில் கட்டப்பட்டு வருகிறது. இந்தியாவின் பல்வேறு இடங்களில் இருந்து காணிக்கையாக பெறப்பட்ட செங்கற்கள், நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இருந்து வெட்டி கொண்டு வரப்பட்ட கற்கள் உதவியுடன் கோவில் கட்டப்பட்டு வருகிற. பழமை மாறாமல் பக்தர்களை கவரும் வகையில் சிற்ப வேலைப்பாடுகளுடன் பிரமாண்டமான தூண்களுடன் கோவில் கட்டப்பட்டு வருகிறது.

Ayodhyas Ram Temple Set to Redefine Spiritual Tourism and focus on providing all specilities to devotees

இந்த கோவில் என்பது நாகரா கட்டகலைக்கலை நுட்பத்தில் கட்டப்பட்டு வருகிறது. இந்தியாவில் வடமாநிலங்களில் பழமை வாய்ந்த கோவில்கள் இந்த கட்டடக்கலையில் தான் கட்டப்பட்டுள்ளது. அதன்படி கோவிலில் கர்ப்பகிரஹம், மண்டபம், ஷிகாரா (பிரமிடு மற்றும் வளைவு வடிவிலான கோபுரங்கள்), வாகனம் (VAHANA) உள்ளிட்டவையுடன் மொத்தம் 3 அடுக்குகளாக கோவில் அமைய உள்ளது. மொத்தம் 161 அடி உயரத்தில் கோவில் பிரமாண்டமாக கட்டப்பட்டு வருகிறது. கட்டட பணியை டாடா கன்சல்டிங் கட்டுமான நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.

தற்போது ராமர் கோவிலின் முதற்கட்ட பணிகள் முடிந்துள்ளன. இதையடுத்து ராமர் கோவில் கும்பாபிஷேகம் 2024 ஜனவரி மாதம் 22ம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் கோவில் கர்ப்பகிரஹத்தில் (கருவறை) ராமர் சிலை வைக்கப்பட உள்ளது. இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்க உள்ளார். அதோடு மொத்தம் 3 ஆயிரம் விவிஐபிக்கள், நாட்டின் வெவ்வேறு இடங்களில் இருந்து 4 ஆயிரம் சாமியார்கள், மடாதிபதிகள் ப்கேற்க உள்ளனர். மேலும் Ram Temple Movement-ல் பங்கேற்றக கரசேவகர்களின் குடும்பத்தினர் பங்கேற்க உள்ளனர். மேலும் 50 நாடுகளை சேர்ந்த வெளிநாட்டு பிரதிநிதிகள் பங்கேற்க உள்ளனர்.

இந்நிலையில் தான் ராமர் கோவில் திறப்பு விழாவையொட்டி அயோத்தி நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது. இத்தகைய சூழலில் தான் தற்போது அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவையொட்டி அங்கு மேற்கொள்ளப்பட்டுள்ள சிறப்பு ஏற்பாடுகள் குறித்து ‛ஒன் இந்தியா' களஆய்வு செய்துள்ளது. அதன்படி புராணங்கள் மற்றும் வரலாற்றில் தொன்றுதொட்டு உச்சரிக்கப்பட்டு வரும் அயோத்தி புனித நகரம் மொத்தமாக மாறி உள்ளது.

அதாவது இந்தியாவின் ஆன்மிக தலத்தின் சிறப்பு வாய்ந்த நகரமாக அயோத்தியை மாற்ற அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. குறிப்பாக அயோத்தி ராமர் கோவில் செல்லும் வழியில் பக்தர்களை வரவழைக்கும் வகையில் நினைவு சின்னங்களோடு கூடிய பிரமாண்டமான நுழைவு வாயில் அமைக்கப்பட்டுள்ளது. இது பக்தி மற்றும் இந்திய கட்டடக்கலை திறமையினை எடுத்து காட்டும் வகையிலும், பக்தர்களை கவரும் வகையிலும் அமைந்துள்ளது.

மேலும் பக்தர்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நடைபாதைகள் விரிவுப்படுத்தப்பட்டுள்ளன. அதோடு மழை, வெயில் காலத்திலும் பக்தர்களை பாதுகாக்கும் வகையில் நடைபாதைகள் மேற்கூரைகள் அமைக்கப்பட்டுள்ளதாக டாடா கன்சல்டிங் இன்ஜினியர்ஸ் தலைமை கட்டுமான மேலாளர் ராஜீவ் குமார் டியோ ‛ஒன் இந்தியாவிடம்' தெரிவித்துள்ளார். இது பக்தர்களின் கால்களுக்கும் பாதுகாப்பை உறுதிப்படுத்தும்.

Ayodhyas Ram Temple Set to Redefine Spiritual Tourism and focus on providing all specilities to devotees

மேலும் கோவிலில் பக்தர்களின் உடைமைகளை பாதுகாப்பவதற்கு லாக்கர் அறைகள், குளிர்ந்த தண்ணீர், ஹாட் வாட்டர், ஓய்வறைகள், உடை மாற்றும் அறைகள் உள்ளிட்டவை ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதுபற்றி அங்கு வந்திருந்த பக்தரான ராஜ் கிஷோர் கூறுகையில், ‛‛கோவிலின் கட்டுமானம் மிகவும் சிறப்பாக அமைந்துள்ளது. பக்தர்களுக்கு அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளது. இது நிச்சயம் பக்தர்களை ஈர்க்கும்'' என்றார்.

மேலும் ராஜஸ்தான், மஹாராஷ்டிரா, தெலுங்கானா மாநிலங்களில் இருந்து வந்திருந்தவர்களிடம் கேட்டபோது, ‛‛உண்மையில் இது எங்களுக்கு மகிழ்ச்சியை தருகிறது. ராமர் கோவில் பணிகள் தற்போது சிறப்பாக நடந்து வருகிறது. கோவில் உள்ளே சென்று தரிசனம் செய்ய ஆர்வமாக இருக்கிறோம். அயோத்தி ராமர் கோவில் உண்மையில் இந்தியாவின் கலாசார பாரம்பரியத்தின் பிரதிபலிப்பாகவும், உலகளவில் ஆன்மிக சுற்றுலா தளங்களில் ஒன்றாகவும் இடம்பெறும்'' என்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+