புயல் தாக்கிய இரவு பிறந்த குழந்தைகளுக்கு 'பாய்லின்' பெயர்
கஞ்சம்: ஒடிஷாவை புயல் தாக்கியபோது பிறந்த குழந்தைகளுக்கு பாய்லின் என்று பெயர் வைக்கவிருக்கிறார்கள்.
ஒடிஷா மாநிலத்தை பாய்லின் புயல் தாக்கி பெருத்த சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. பாய்லினால் பாதிக்கப்பட்டுள்ள கஞ்சம் மாவட்டத்தில் இருக்கும் பெர்ஹாம்பூரில் புயல் தாக்கிய அன்று 27 குழந்தைகள் பிறந்துள்ளன.
நகரில் உள்ள எம்கேசிஜி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 7 குழந்தைகளும், கிறிஸ்டியன் மருத்துவமனையில் 17 குழந்தைகளும் மற்றும் சிட்டி மருத்துவமனையில் 3 குழந்தைகளும் பிறந்துள்ளன.

தங்கள் மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு பாய்லின் என்று பெயர் வைக்குமாறு அவர்களின் பெற்றோர்களை கேட்டுக் கொண்டதாக கிறிஸ்டியன் மருத்துவமனை தலைவர் என்.கே. நந்தா தெரிவித்துள்ளார்.
புயல் தாக்கியபோது மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் லலிதா பாரிக் என்பவருக்கு பெண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு மஞ்சள் காமாலைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் லலிதா கூறுகையில்,
முன்னதாக என்னுடைய 4 குழந்தைகள் இறந்துவிட்டன. என் மகள் மட்டும் உயிர் பிழைத்தால் அவளுக்கு நிச்சயமாக பாய்லின் என்று தான் பெயர் வைப்பேன் என்றார்.
அரசு பெண்கள் உயர் நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த நிவாரண முகாமில் இருந்த பெண் ஒருவர் ஆண் குழந்தையை பெற்றெடுத்தார். அந்த குழந்தைக்கு தூஃபான்(புயல்) என்று பெயர் வைக்குமாறு அவரது உறவினர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இந்த குழந்தைகள் அனைவரும் கடந்த 12ம் தேதி இரவு பாய்லின் கோபால்பூர் கடலோரம் அமைந்துள்ள பகுதியை தாக்கியபோது பிறந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications