பாபர் மசூதி இடிப்பு வழக்கு: அத்வானி உள்ளிட்டோர் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்! குற்றச்சாட்டுப் பதிவு!
பாபர் மசூதி இடிப்பு வழக்கில் அத்வானி உள்ளிட்டோர் இன்று ஆஜராகின்றனர்.
லக்னோ: பாபர் மசூதி இடிப்பு வழக்கில் அத்வானி உள்ளிட்டோர் இன்று ஆஜராகின்றனர். பாஜக மூத்த தலைவர்களான அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி ஆகியோர் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்படவுள்ளன.
பாபர் மசூதி இடிப்பு வழக்கை விரைந்து முடிக்க சுப்ரிம் கோர்ட் உத்தரவிட்டிருந்தது. இதைத்தொடர்ந்து லக்னோ சிபிஐ சிறப்பு நீதிமன்றம் விசாரணையை முடுக்கி விட்டுள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் அமைந்திருந்த பாபர் மசூதி கடந்த 1992-ம் ஆண்டு டிசம்பர் 6-ந் தேதி இடிக்கப்பட்டது. வழக்கு விசாரணை லக்னோ சிபிஐ சிறப்பு கோர்ட்டில் நடந்து வருகிறது.

இன்று ஆஜர்
பாபர் மசூதி இடிப்பு வழக்கில் குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்வதற்காக, பாஜக மூத்த தலைவர்களான அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி ஆகியோர் லக்னோ சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் இன்று ஆஜராகவுள்ளனர்.

தினசரி விசாரணை
ரேபரேலி, லக்னோ நீதிமன்றங்களில் விசாரிக்கப்பட்டு வந்ததை ஒரே வழக்காக மாற்றி, லக்னோ சிறப்பு நீதிமன்றம் விசாரணை நடத்துவதற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, பாபர் மசூதி இடிப்பு வழக்கை, லக்னோ சிறப்பு நீதிமன்றம், தினசரி அடிப்படையில் விசாரித்து வருகிறது.

இன்று குற்றச்சாட்டுப் பதிவு
இந்த வழக்கில் அத்வானி, ஜோஷி உள்ளிட்ட தலைவர்கள் மீது இன்று குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்படுவதால், அவர்கள் 3 பேரும் வரும் 30-ம் தேதி ஆஜராக வேண்டும் என்றும் சிபிஐ கோர்ட்டு உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து அவர்கள் அனைவரும் இனறு நீதிமன்றத்தில் ஆஜராகின்றனர்.

பாதுகாப்பு தீவிரம்
பாஜக மூத்த தலைவர்கள் ஆஜராவதால் நீதிமன்ற வளாகத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. 15 ஆண்டுகளுக்குப் பிறகு பாபர் மசூதி இடிப்பு வழக்கு சூடுபிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications