ஓடும் ரயிலில் டாய்லெட்டில் பிறந்து தண்டவாளத்தில் விழுந்த குழந்தை உயிர் பிழைப்பு
ஜெய்பூர்: ராஜஸ்தானில் ஓடும் ரயிலின் கழிவறையில் பிறந்த குழந்தை தண்டவாளத்தில் விழுந்தும் உயிர் பிழைத்துள்ளது.
ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர் பவுரி பல்பி(22). நிறைமாத கர்ப்பிணியான அவர் தனது குடும்பத்தாருடன் சூரத்காரில் இருந்து ஹனுமன்காருக்கு ரயிலில் கிளம்பினார். வழியில் அவருக்கு பிரசவ வலி எடுத்துள்ளது. இதையடுத்து அவர் கழிவறைக்கு சென்றுள்ளார். அங்கு அவர் ஆண் குழந்தையை பெற்றெடுத்துவிட்டு மயங்கிவிட்டார்.
குழந்தை கழிவறை தொட்டி வழியாக ஓடும் ரயிலில் இருந்து தண்டவாளத்தில் விழுந்தது. பவுரி வெகுநேரமாகியும் வராததால் அவரின் உறவினர்கள் கழிவறைக்கு சென்று பார்த்தபோது அவர் மயங்கிக் கிடந்தார்.
இதற்கிடையே தண்டவாளத்தில் குழந்தை அழும் சத்தம் கேட்டு ரயில்வே ஊழியர் ஒருவர் அதை காப்பாற்றி அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தார். ஓடும் ரயிலில் இருந்து விழுந்தும் குழந்தை உயிர் பிழைத்துள்ளது பலரையும் வியக்க வைத்துள்ளது.
ரயில் ஹனுமன்காரை அடைந்த உடன் பவுரியை மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் அவரின் குழந்தையையும் அதே மருத்துவமனைக்கு கொண்டு வந்து தாயிடம் ஒப்படைத்தனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications