மருத்துவமனை அலட்சியத்தால் விரலை இழந்த 2 மாத குழந்தை.. டாக்டர், 2 நர்சுகள் சஸ்பெண்ட்
கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் இரண்டு மாத குழந்தையின் விரல் அகற்றப்பட்ட சம்பவம் தொடர்பாக, டாக்டர் மற்றும் இரண்டு நர்சுகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
மேற்கு வங்க மாநிலம் பர்த்வான் மாவட்டம் அசான்சோல் மாவட்டத்தில் அரசு மருத்துவமனை ஒன்றில் கடந்த வாரம் மருத்துவமனை ஊழியர்களின் அலட்சியத்தால் இரண்டு மாதக்குழந்தையின் விரல் செயல் இழந்தது. அதனைத் தொடர்ந்து சில தினங்களுக்கு முன்னர் அக்குழந்தையின் விரல் கொல்கத்தா மருத்துவமனையில் ஆபரேஷன் மூலம் நீக்கப்பட்டது.

இந்த சம்பவம் தொடர்பாக அம்மாநில சுகாதாரத்துறை விசாரணை மேற்கொண்டது. அதன் தொடர்ச்சியாக சம்பந்தப்பட்ட மருத்துவமனையில் ஆர்.எம்.ஓ. அனீஷ் குமார் மற்றும் இரண்டு நர்சுகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
இந்த ஊழியர்களின் அலட்சியத்தினாலேயே குழந்தையின் விரல் அகற்றப்பட வேண்டிய நிலை ஏற்பட்டது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
குழந்தையின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு, சம்பந்தப்பட்ட குழந்தையின் பெயர், பாலினம், அவரது குடும்பம் உள்ளிட்ட விபரங்களை வெளியிட சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இவ்வாறு மருத்துவமனை ஊழியர்களின் அலட்சியத்தால் குழந்தையின் விரல் அகற்றப்படுவது இது முதல்முறையல்ல. ஏற்கனவே கடந்தாண்டு தினஜ்பூர் மாவட்டத்தில் மருத்துவமனை ஊழியர்களின் அலட்சியத்தால் புதிதாக பிறந்த குழந்தையின் விரல் அகற்றப்பட்டது நினைவுக் கூறத்தக்கது.
-
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட்












Click it and Unblock the Notifications