ஸ்டேட்டுக்கே ஒப்பி யூனிட்டி: நீட் டிரான்ஸ்லேஷனை மிஞ்சிய கேவலமான மொழிபெயர்ப்பு!
Recommended Video

காந்திநகர்: சர்தார் வல்லபாய் படேலின் பிறந்த தினத்தை முன்னிட்டு இன்று திறக்கப்படவுள்ள பெரிய சிலையின் அருகே வைக்கப்பட்ட பலகையில் மிகவும் கேவலமாக தமிழை மொழிபெயர்த்துள்ளனர்.
இந்தியாவின் இரும்பு மனிதர் என்று அழைக்கப்படும் சர்தார் வல்லபாய் படேலுக்கு இன்று 143-வது பிறந்த தினம் ஆகும். இதை முன்னிட்டு, குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு, உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் ஆகியோர் டெல்லியில் அவரது உருவ படத்துக்கு மரியாதை செலுத்தினர்.
ஒற்றுமையை படேல் பறைசாற்றிய காரணத்தால் ஒற்றுமையின் சின்னம் என்ற பெயரில் அவருக்கு மிகவும் உயரமான சிலை வைக்கப்பட்டது. இந்த சிலை 182 அடி உயரமாகும். இது உலகிலேயே உயரமான சிலை என்ற பெருமையையும் பெறுகிறது.
[உலகிலேயே மிக உயரமானது.. குஜராத்தில் இன்று திறக்கப்படுகிறது சர்தார் வல்லபாய் பட்டேல் சிலை!]

கேலரி
அவர் பிறந்த குஜராத் மாநிலமான நர்மதை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள சர்தார் சரோவர் அணை அருகே மிக பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ளது. இந்த சிலை கட்டப்பட்டுள்ள கேலரியில் ஒரே நேரத்தில் 200 பார்வையாளர்கள் பார்க்கலாம்.

பெருமைகள் என்ன
இதை அமைப்பதற்காக ரூ. 2,989 கோடி செலவிடப்பட்டுள்ளது. 33 மாதங்களில் கட்டி முடிக்கப்பட்ட சிலையாகும். இத்தகைய சிறப்பு வாய்ந்த இந்த சிலை அமைக்கப்பட்டுள்ள இடத்தில் ஒற்றுமையின் சிலை (Statue of Unity) என பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

ஒற்றுமை சிலை
பிரெஞ்சு, ஸ்பேனிஷ், சீனம், ரஷ்யா, இந்தி ஆகிய மொழிகளில் கூட சரியாக மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. ஆனால் தமிழ் மொழியில் மட்டும் மகா கேவலமாக உள்ளது. கூகுள் டிரான்ஸ்லேட்டில் மொழி பெயர்த்திருந்தால் கூட ஒற்றுமை சிலை என வந்திருக்கும்.

மோசமான மொழிபெயர்ப்பு
இத்தனை மோசமாக தமிழை கொலை செய்யும் வகையில் இதை மொழிபெயர்ப்பு செய்தது யார். எல்லாருக்கும் எல்லா மொழிகளும் தெரியாவிட்டாலும் கூட அந்த மொழி தெரிந்த ஒருவரிடம் கேட்டு மொழி பெயர்த்திருக்கலாமே. டிஜிட்டல் இந்தியா டிஜிட்டல் இந்தியா என மார்தட்டி கொள்ளும் இந்த அரசு மொழிபெயர்ப்புக்கு இணையத்தை பயன்படுத்தாமல் தான்தோன்றித்தனமாக மொழி பெயர்த்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து விமர்சனங்கள் எழவே அந்த வார்த்தை மட்டும் பெயின்டால் அழிக்கப்பட்டுள்ளது. எனினும் அந்த எழுத்துகள் தெளிவாக தெரிகிறது.

ஜாக்கிரதை
நீட் தேர்வில் கூட இதுபோல் மகா மட்டமான மொழிபெயர்ப்புகள் இடம்பெற்றன. இதனால் தமிழக மாணவர்கள் நீதிமன்றம் வரை சென்று பலனின்றி பாதிக்கப்பட்டனர். இதை கருத்தில் கொண்டாவது ஜாக்கிரதையாக மொழி பெயர்த்திருக்கலாமே. இந்த நிலையில் இந்த விழாவில் தமிழக அமைச்சர்கள் மாஃபா பாண்டியராஜன் மற்றும் கடம்பூர் ராஜூ ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.
-
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்!












Click it and Unblock the Notifications