For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

உலகின் மிக உயரமான.. பிரம்மாண்ட வல்லபாய் பட்டேல் சிலையை திறந்து வைத்தார் மோடி!

குஜராத்தில் நிறுவப்பட்டிருக்கும் சர்தார் வல்லபாய் பட்டேல் சிலையை பிரதமர் மோடி திறந்து வைத்துள்ளார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    பிரம்மாண்ட வல்லபாய் பட்டேல் சிலையை திறந்து வைத்தார் மோடி!-வீடியோ

    காந்தி நகர்: குஜராத்தில் நிறுவப்பட்டிருக்கும் சர்தார் வல்லபாய் பட்டேல் சிலையை பிரதமர் மோடி திறந்து வைத்துள்ளார். வண்ணமயமான விழாக்களுடன் இந்த சிலை திறக்கப்பட்டது.

    இந்த சிலை ஒற்றுமைக்கான சிலை (Statue Of Unity)என்று அழைக்கப்படுகிறது. குஜராத்தின் நர்மதை கரையில் இது நிறுவப்பட்டுள்ளது. இந்த சிலைதான் உலகிலேயே மிகவும் உயரமான சிலை ஆகும்.

    இதற்கான விழா ஏற்பாடுகள் மிகவும் பெரிய அளவில் செய்யப்பட்டு இருந்தது. மிகவும் கண்ணை கவரும் வகையில் அலங்காரம் செய்யப்பட்டது. விடுதலை போராட்ட வீரரான சர்தார் வல்லபாய் பட்டேலின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று சிலை திறக்கப்பட்டுள்ளது.

    எப்போது செய்தார்

    எப்போது செய்தார்

    கடந்த 2013 அக்டோபர் மாதம் 31ம் தேதி பிரதமர் மோடி இந்த சிலைக்கு அடிக்கல் நாட்டினார். அப்போது அவர் குஜராத் முதல்வராக இருந்தார். இந்த நிலையில் இத்தனை வருட பணிகளுக்கு பிறகு இன்று இந்த சிலை திறக்கப்பட உள்ளது. சர்தார் வல்லபாய் பட்டேலின் 143வது பிறந்தநாளை முன்னிட்டு இன்று அவரின் சிலை திறக்கப்படுகிறது.

    இந்தியா முழுக்க

    இந்தியா முழுக்க

    இவர் இந்தியாவின் இரும்பு மனிதர் என்று அழைக்கப்பட்ட காரணத்தால், இந்தியா முழுக்க பல்வேறு பகுதிகளில் இருந்து இவரின் சிலைக்காக இரும்பு கொண்டு வரப்பட்டது. ஆம் இந்த சிலைக்கு உள்ளே இருக்கும் இரும்பு பல்வேறு மாநிலங்களில் இருந்து கொண்டு வரப்பட்டது. நர்மதா டேமில் இருந்து 3 கிலோ மீட்டர் தூரத்தில் இந்த சிலை அமைக்கப்பட்டு இருக்கிறது.

    எப்படி கட்டினார்கள்

    எப்படி கட்டினார்கள்

    இதை வடிவமைத்தது, பத்ம பூஷன் விருது பெற்ற சிற்பி ராம் வி சுடர். லார்சன் மற்றும் டொப்ரோ நிறுவனம் இதில் முக்கிய பணிகளை செய்துள்ளது. இதை உருவாக்க 250 இன்ஜினியர்கள், 3400 பணியாளர்கள் உழைத்து இருக்கிறார்கள். இதை உருவாக்க மொத்தமாக 40 மாதம் ஆகியுள்ளது.

    என்ன உயரம்

    என்ன உயரம்

    இதுதான் உலகிலேயே மிகவும் உயரமான சிலையாகும். இதன் உயரம் 182 அடியாகும். சீனாவின் ஸ்பிரிங் டெம்பிள் புத்தரின் 177 மீட்டர் சிலை கொண்டிருந்த பெருமையை இது முறியடித்துள்ளது. அமெரிக்காவின் சுதந்திர தேவி சிலையைவிட இது இரண்டு மடங்கு உயரம் கொண்டது.

    சீனா செய்த வேலை

    சீனா செய்த வேலை

    இந்த சிலை முழுக்க முழுக்க இந்தியாவில் தயாரானது இல்லை. உள்புறம் மட்டுமே இந்தியாவில் தயாரானது. வெளிப்புறம் 553 வெண்கல தகடுகளால் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் 10-15 நேனோ பேனல்கள் உள்ளது. இது சீனாவில் தயாரிக்கப்பட்டது. இது விமர்சனத்திற்கு உள்ளாகி உள்ளது. ஆனால் இந்தியாவில் இதை உருவாக்கும் வசதி இல்லை என்று மத்திய அரசு கூறியுள்ளது.

    எவ்வளவு செலவு

    எவ்வளவு செலவு

    இதை உருவாக்க 2389 கோடி ரூபாய் செலவு ஆகியுள்ளது. தினமும் இதை பார்க்க 15,000 பேர் வருவார்கள் என்று கூறப்படுகிறது. ஒரே நேரத்தில் 500 பேர் வரை இந்த சிலையை பார்க்க முடியும்.

    என்ன மியூசியம்

    என்ன மியூசியம்

    இந்த சிலைக்கு உள்ளே கீழ் புறத்தில் பெரிய அருங்காட்சியகம் உள்ளது. இது பட்டேலின் நினைவாக உருவாக்கப்பட்ட மியூசியம் ஆகும். இதில் 40, 000 அரிய ஆவணங்கள் உள்ளது. 2000க்கும் அதிகமான புகைப்படங்கள் உள்ளது. பட்டேலின் வாழ்க்கையை பறைசாற்றும் பொருட்களும் இருக்கிறது.

    English summary
    PM Modi To Unveil Sardar Vallabhbhai Patel statue today in Gujarat.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X