சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு
சென்னை: தமிழக முதல்வராகப் பொறுப்பேற்ற பிறகு முதன்முறையாக இரண்டு நாள் பயணமாக டெல்லி சென்ற முதல்வர் விஜய், தன் பயணத்தை முடித்துக்கொண்டு திடீரென சென்னை திரும்பியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பையும் விவாதத்தையும் கிளப்பியுள்ளது. பல தலைவர்களை சந்திக்க சென்ற நிலையில், வெறும் 2 தலைவர்களை மட்டுமே சந்தித்து பேசிவிட்டு வந்ததும் கவனம் பெற்று வருகிறது.. என்னதான் நடந்தது?
2 நாள் பயணத்தின் முதல் நாளில் பிரதமர் மோடியைச் சந்தித்துப் பேசினார் முதல்வர் விஜய்.. அதனைத் தொடர்ந்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனையும் நேரில் சந்தித்து தமிழகத்தின் வளர்ச்சித் திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீட்டை விரைந்து வழங்குமாறு வலியுறுத்தினார்.

சென்னை திரும்பிய விஜய்
அன்றைய இரவு டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் தங்கிய அவரை, மறுநாள் காலையில் அங்கு பணியாற்றும் தமிழகத்தைச் சேர்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மரியாதை நிமித்தமாக சந்தித்தனர். இதன் பிறகு காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவர்களை முதல்வர் விஜய் சந்திப்பார் என்று அரசியல் வட்டாரங்களில் மிக பலமாக எதிர்பார்க்கப்பட்ட நிலையில், யாரையும் சந்திக்காமல் காலை 10 மணிக்கே தனி விமானம் மூலம் அவர் சென்னைக்குப் புறப்பட்டது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த திடீர் மாற்றத்திற்குப் பின்னால் இருக்கும் உண்மையான காரணம் குறித்து காங்கிரஸ் வட்டாரங்களில் விசாரித்தபோது சில அதிரடித் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கர்நாடக மாநிலத்தில் இன்னும் 2 ஆண்டுகளில் சட்டசபைத் தேர்தல் நடக்கவிருக்கும் நிலையில், கடந்த தேர்தலின் போதே காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டப்படும் என்று காங்கிரஸ் கட்சி அங்கு வாக்குறுதி அளித்திருந்தது. ஆனால் தமிழக அரசின் தொடர்ச்சியான சட்டப் போராட்டங்கள் காரணமாக அந்தத் திட்டத்திற்கு முட்டுக்கட்டை விழுந்து வருகிறது.
சிவக்குமார் போட்ட பூமி பூஜை
இதனிடையே கர்நாடக துணை முதல்வராக இருக்கும் சிவகுமார் விரைவில் முதல்வராகப் பொறுப்பேற்கவுள்ள சூழலில், மேகதாது அணை கட்டும் பணியை எப்படியும் முடித்தே தீருவேன் என்ற நோக்கில் பூமி பூஜை நடத்தப் போவதாக அறிவித்துள்ளார்.
டெல்லியில் பிரதமரை சந்தித்த போது முதல்வர் விஜய், மேகதாது அணை கட்டுவதைத் தடுத்து நிறுத்த கர்நாடக அரசுக்கு உடனடியாக உத்தரவிட வேண்டும் என்று மிக முக்கியக் கோரிக்கையை முன்வைத்தார். இந்த இக்கட்டான சூழ்நிலையில், அவர் டெல்லியில் காங்கிரஸ் தலைவர்களைச் சந்தித்தால், மேகதாது அணை கட்டுமானப் பணிகளை நிறுத்தும்படி அவர்களிடமும் நேரில் வலியுறுத்த வேண்டும் என்று தமிழக எதிர்க்கட்சிகள் கடுமையான அழுத்தத்தை கண்டிப்பாக கொடுக்கும்.
ராகுல் காந்திக்கு டைம் இல்லை
இது தேவையற்ற அரசியல் நெருக்கடியை உருவாக்குவதுடன், அடுத்த 6 மாதங்களில் தமிழகத்தில் 5 சட்டசபைத் தொகுதிகளுக்கு நடக்கவிருக்கும் இடைத்தேர்தலிலும் தங்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தலாம் என்று கணக்கு போடப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் இருந்து சாமர்த்தியமாக விலகியே இருக்கவே முதல்வர் விஜய் இந்தச் சந்திப்பைத் தவிர்த்ததாக கூறப்படுகிறது.
இருந்தாலும் காங்கிரஸ் தரவு பகுப்பாய்வு பிரிவின் தேசிய தலைவர் பிரவீன் சக்கரவர்த்தி சென்னையில் அளித்த பேட்டியில், ராகுல் காந்திக்கு மாலை நேரமின்மை காரணமாகவே இந்த சந்திப்பு தள்ளிப்போனதாகவும், அடுத்த முறை டெல்லி செல்லும்போது நிச்சயம் சந்திப்பு நடக்கும் என்றும் விளக்கமளித்துள்ளார்.
நிதி ஆயோக் கூட்டம்
வரும் ஜூன் 11ம் தேதி டெல்லியில் நடக்கவிருக்கும் நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்க முதல்வர் விஜய் மீண்டும் டெல்லி செல்லவிருப்பதால், அப்போது இந்தச் சந்திப்பு சாத்தியமாகலாம் என தெரிகிறது
இதனிடையே மேகதாது விவகாரத்தில் கர்நாடக அரசின் பிடிவாதத்தைக் கண்டித்து தமாகா தலைவர் ஜிகே வாசன் விடுத்துள்ள அறிக்கையில், தமிழக டெல்டா மாவட்டங்களைப் பாலைவனமாக்கும் இந்த முயற்சியை முதல்வர் விஜய் தீவிரமாக எதிர்க்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
ஹலோ மிஸ்டர் விஜய்
இன்னொருபுறம் இந்த டெல்லி பயணத்தின் போது தமிழ்நாடு இல்லத்தில் முதல்வருக்கு அளிக்கப்பட்ட பாதுகாப்பில் கடுமையான குளறுபடிகள் ஏற்பட்டதாகவும் சில புகார்கள் எழுந்துள்ளன.
செய்தியாளர்களை சந்திக்காமல் தவிர்த்து வந்த முதல்வரைப் பேட்டி எடுக்கக் காத்திருந்த பத்திரிகையாளர்கள் மற்றும் அடையாளம் தெரியாத வெளியாட்கள் சிலர், தமிழ்நாடு இல்ல வளாகத்திற்குள் அத்துமீறி நுழைந்து முதல்வரை ஒருமையில் கூச்சலிட்டு அழைத்த சம்பவமும் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது, "ஹலோ மிஸ்டர் விஜய்" ஹலோ விஜய், விஜய் விஜய் என்றெல்லாம் கூச்சலிட்டதாக தெரிகிறது.
டெல்லி போலீசாரின் பாதுகாப்பு சிறப்பாக இருந்தபோதிலும், தமிழ்நாடு இல்லத்தின் உள்ளே பாதுகாப்பிலிருந்த தமிழக ஆயுதப்படை போலீசார் யாரை அனுமதிக்க வேண்டும் என்பதில் காட்டிய அலட்சியமே இந்த அதிரடி குளறுபடிக்குக் காரணம் என்றும் சொல்லப்படுகிறது... இப்படி பல காரணங்கள் சொல்லப்பட்டாலும், எது உண்மையான காரணம் என்று தெரியவில்லை...!!
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications