For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கஜூராகோ கோயிலில் காமசூத்ரா புத்தகம் விற்பதா.. பஜ்ரங் சேனா போர்க்கொடி!

உலகப் புகழ்பெற்ற கஜூராகோ கோயிலில் காமசூத்ரா புத்தகத்தை விற்பனை செய்யக் கூடாது என்ற பஜ்ரங் சேனா அமைப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

By Gajalakshmi
Google Oneindia Tamil News

மத்தியபிரதேசம்: கஜூராகோ கோயில் வளாகத்துக்குள் காமசூத்ரா புத்தகத்தை விற்கக் கூடாது என்று பஜ்ரங் சேனா அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

மத்திய பிரதேசத்தில் உள்ள புகழ்பெற்ற கஜூராகோ கோயில் பாலியல் சார்ந்த சிற்பங்களுக்காகவும் கட்டிட கலைக்காகவும் புகழ் பெயர் பெற்றது. யுனெஸ்கோவின் உலக பாரம்பரியச் சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ள இந்த இடத்திற்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.

இங்கு காமசூத்ரா புத்தகங்கள் மற்றும் இந்த கோயிலில் இடம்பெற்று சிலைகளின் மாதிரிகள் கோயிலுக்கு அருகில் இருக்கும் கடைகளில் அதிகமாக விற்பனை செய்யப்படுகிறது. இதற்கு தடைவிதிக்க வேண்டும் பஜ்ரங் சேனா அமைப்பினர் போலீசிடம் புகார் கொடுத்துள்ளனர்.

கோயிலில் விற்பதா?

கோயிலில் விற்பதா?

கஜூராகோ துணை பிரிவு போலீஸ் அதிகாரியிடம் பஜ்ரங் சேனா அமைப்பின் தலைவர் ஜோதி அகர்வால் கொடுத்துள்ள புகார் மனுவில் ‘இந்த வரலாற்று சிறப்புமிக்க கோயிலுக்கு ஏராளமான வெளிநாட்டுப் பயணிகள் வருகின்றனர். கோயிலுக்குள் காமசூத்திரா புத்தகங்கள் விற்படுகின்றன.

மரியாதை பாதிக்கப்படும்

மரியாதை பாதிக்கப்படும்

சிற்பங்களில் உள்ள மாதிரி சிலைகளும் விற்கப்படுகின்றன. கோயிலின் உள்ளே இப்படி விற்கப்படுவது நமது கலாசாரம் மற்றும் பண்பாட்டுக்கு எதிரானது. கோயில் வளாகத்துக்குள்ளேயே இது போன்ற புத்தகங்களை விற்றால் வெளிநாட்டினர் மத்தியில் நமது மதிப்பு, மரியாதை பாதிக்கப்படும். அதனால் இதைத் தடுத்து நிறுத்த வேண்டும்' என்று கூறியுள்ளார்.

காமசூத்ரா புத்தகம் சொல்வது என்ன?

காமசூத்ரா புத்தகம் சொல்வது என்ன?

காமத்தை அடிப்படையாகக் கொண்டுள்ளதாக கருதப்படும் காமசூத்ரா புத்தகம், இந்து மதத்தின் தர்மம், அர்தா, காமம், மோக்ஷம் உள்ளிட்ட 4 முக்கிய அம்சங்களை விளக்குகிறது. சிலர் பரப்புவது போல காமசூத்ரா பாலுறவு பற்றி மட்டுமே சொல்வதல்ல மனிதனின் அடிப்படை வாழ்வியலில் உள்ள இன்பமான வாழ்வை எடுத்துச் சொல்வதே.

மத சாயம்

மத சாயம்

ஆனால் சங் பரிவார் அமைப்பினர் இந்தியாவின் மேற்கத்திய கலாச்சார முறைக்கு முற்றுப்புள்ளி வைக்கவே இதைப் பிரச்சினையாக்குகின்றனர். அதேசமயம், வரலாற்றில் எந்தப் பிழையும் இல்லை என்று புராதன ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

English summary
Bajrang Sena activists approached the Chhatarpur Police stating that Kamasutra books and 'obscene' figurines were being sold in the world famous Khajuraho temples
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X