ஸ்பெக்ட்ரம் வழக்கு: நீதிபதி எச்சரிக்கையால் புதிய வாக்குமூலம் அளித்த சாகித் பல்வா!

ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு முறைகேடு வழக்கு டெல்லி சி.பி.ஐ. நீதிமன்றத்தில் நீதிபதி சைனி முன்னிலையில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, கனிமொழி எம்.பி., உள்ளிட்ட 14 பேர், மற்றும் ரிலையன்ஸ், ஸ்வான் டெலிகாம் மற்றும் யூனிடெக் ஆகிய மூன்று நிறுவனங்களின் வாக்குமூலம் பதிவு செய்யும் பணி கடந்த 5-ந்தேதி தொடங்கியது.
அதன்படி ஆ.ராசா, கனிமொழி எம்.பி., சரத்குமார், யுனிடெக் லிமிடெட் நிர்வாக இயக்குநர் சஞ்சய் சந்திரா உள்ளிட்டோர், நீதிபதி ஒ.பி.சைனி முன்பு ஆஜராகி வாக்குமூலம் பதிவு செய்தனர். அவர்களை தொடர்ந்து ரிலையன்ஸ் டெலிகாம் லிமிடெட், சினியூக் பிலிம்ஸ் மேம்பாட்டாளர் கரீம் மொரானி, யுனிடெக் ஒயர்லெஸ் (தமிழ்நாடு) நிறுவனம் சார்பில் பங்கஜ் பாத்வா உள்ளிட்டோரின் வாக்குமூலமும் பதிவு செய்யப்பட்டது.
இந்தநிலையில், வாக்குமூலத்தை எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்ய அனுமதிக்குமாறு ஸ்வான் டெலிகாம் நிறுவன இயக்குனர் சாகித் உஸ்மான் பல்வா மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வேண்டுகோளை நீதிபதி சைனி ஏற்றுக்கொண்டார்.
இதன்படி சாகித் பல்வா தாக்கல் செய்த எழுத்துப்பூர்வ வாக்குமூலத்தில் சில எழுத்துப்பிழைகள் இருந்தது. எனவே அவற்றை சரிசெய்து மீண்டும் தாக்கல் செய்யும்படி நீதிபதி சைனி உத்தரவிட்டார்.
ஆனால் அவர் மீண்டும் தாக்கல் செய்த பதில்களும் தெளிவாக இல்லை. இதைத்தொடர்ந்து, அவரது வாக்குமூலம் பதிவுசெய்யப்படும் நடைமுறைகள் கடந்த 10 ந்தேதி மீண்டும் தொடங்கப்பட்டது. அப்போது பல்வா, தன்னிடம் எழுப்பப்பட்டுள்ள கேள்விகள் புரியவில்லை என்றும், வேறு வடிவில் அந்த கேள்விகளை கேட்க முடியுமா? என்றும் மீண்டும் கோரினார்.
பல்வாவின் இந்த செயல் சந்தேகத்தை ஏற்படுத்துவதாக கூறிய சி.பி.ஐ. சிறப்பு வழக்கறிஞர் யு.யு.லலித், அவரின் இந்த செயலுக்கு கடும் ஆட்சேபம் தெரிவித்தார். மேலும் நீதிமன்ற விசாரணையை தாமதப்படுத்த முயல்வதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
பல்வாவின் நடவடிக்கைகளால் கோபமடைந்த நீதிபதி, அவருக்கு கடும் கண்டனம் தெரிவித்தார். பொறுமைக்கு ஓர் எல்லை உண்டு என்று கூறிய அவர், நீதிமன்றத்தை ஏமாற்ற நினைத்தால் சிறை செல்ல நேரிடும் என்றும் எச்சரித்தார். இதற்கு சாகித் பல்வா மற்றும் வழக்கறிஞர் விஜய் அகர்வால் ஆகியோர் மன்னிப்பு கோரினர்.
பின்னர் இதன் மீதான முடிவை 12-ந்தேதி அறிவிப்பதாக கூறி வழக்கை நீதிபதி ஒத்திவைத்தார். இந்தநிலையில் வாக்குமூலம் பதிவு செய்யும் நடவடிக்கை நேற்று மீண்டும் நடைபெற்றது.
அப்போது ரிலையன்ஸ் நிறுவன நிர்வாகிகள் கவுதம் தோஷி மற்றும் நிதின் அகர்வால் ஆகியோர் எழுத்துபூர்வமான வாக்குமூலத்தை பதிவு செய்தனர். அப்போது, சாகித் உஸ்மான் பல்வா சார்பில் ஆஜராகிய மூத்த வழக்கறிஞர் மஜித் மேமன், சாகித் பல்வா சார்பில் மீண்டும் மன்னிப்பு கோரினார். மேலும், திருத்தப்பட்ட வாக்குமூலத்தை சாகித் பல்வா தாக்கல் செய்திருப்பதாகவும் கூறினார். இதைத்தொடர்ந்து சாகித் பல்வாவின் வாக்குமூலம் குறித்து வருகிற 16-ந்தேதி முடிவு செய்யப்படும் என்று கூறி, விசாரணையை நீதிபதி ஒத்திவைத்தார்.
-
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
எதிர்நீச்சல் சீரியல் ராணா யார் தெரியுமா? இத்தனை படங்களில் நடித்திருக்கிறாரா? இனி தான் சம்பவமே இருக்கு -
சென்னை சென்ட்ரல் -கோவை வந்தே பாரத்... தங்க முட்டை போடும் வாத்து.. ஒப்புக்கொண்ட ரயில்வே? -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை












Click it and Unblock the Notifications