'சாத்தானின் வேதங்கள்' ராஜீவ் தடை செய்தது தவறு: சிதம்பரம்! இத ஒத்துக்க 27 வருஷம் ஆச்சா?-ருஷ்டி பதிலடி
டெல்லி: உலகப் புகழ்பெற்ற எழுத்தாளர் சல்மான் ருஷ்டியின் சாத்தானின் வேதங்கள் ('Satanic Verses') நாவலை ராஜீவ் அரசு தடை செய்தது தவறு என்று முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். இதற்கு பதிலளிக்கும் வகையில் இத ஒத்துக்கொள்ள வெறும் 27 வருசம் தான் ஆனதா? என சல்மான் ருஷ்டியின் கேட்டுள்ளார்.
சர்ச்சைக்குரிய எழுத்தாளராக அறியப்படும் சல்மான் ருஷ்டி எழுதிய 'தி சாத்தானிக் வெர்சஸ்' (சாத்தானின் வேதங்கள்) நாவலைக் கடந்த 1988-ம் ஆண்டு அப்போதைய பிரதமர் ராஜீவ் தடை செய்தார்.

இந்நிலையில், நேற்று 'டைம்ஸ் இலக்கியத் திருவிழா - 2015' நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய ப.சிதம்பரம் சாத்தானின் வேதங்கள் நாவலை ராஜீவ் அரசு தடை செய்ததும், இந்திராவால் அவரச நிலைப் பிரகடனம் அமல் படுத்தப்பட்டதும் தவறு என்று கூறினார்.
இதற்கு பதிலளிக்கும் விதமாக சல்மான் ருஷ்டி தனது டுவிட்டரில் நக்கலாக பதிவிட்டுள்ளார்.
சல்மான் ருஷ்டி டுவிட்டர் பதிவு:
இதை ஒப்புக்கொள்ள வெறும் 27 வருடங்கள்தான் ஆனதா?, இதற்கு முன்பாக செய்யப்பட்ட எத்தனை தவறுகள் திருத்திக் கொள்ளப்பட்டிருக்கின்றன." என்று நக்கலாக கேட்டுள்ளார்.
This admission just took 27 years. How many more before the "mistake" is corrected? https://t.co/qz7t1InXzV
— Salman Rushdie (@SalmanRushdie) November 28, 2015 ஆனால், காலம் கடந்து இப்போது ஏன் இவ்வாறு கூறவேண்டும் என்ற கேள்விக்குப் பதிலளித்த சிதம்பரம், நாவலுக்கு தடை விதிக்கப்பட்ட போதும் தான் இதே கருத்தையே கொண்டிருந்ததாகத் தெரிவித்துள்ளார். அப்போதைய ராஜீவ் தலைமையிலான காங்கிரஸ் அரசில் உள்துறை அமைச்சராக ப. சிதம்பரம் பதவி வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications