ஜெ. சொத்து குவிப்பு வழக்கு: சசிகலா, சுதாகரன், இளவரசிக்கு பெங்களூர் கோர்ட் அபராதம்!
பெங்களூரு: தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் இறுதிவாதத்தை தொடங்காத சசிகலா, சுதாகரன், இளவரசி மூவருக்கும் நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளது. மேலும் இறுதி வாதம் நடைபெறும் நாட்களில் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்றும் கண்டிப்பாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கு பெங்களூர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இதில் அரசுத் தரப்பு வழக்கறிஞர் பவானிசிங் தமது இறுதிவாதத்தை நிறைவு செய்தார்.
இதைத் தொடர்ந்து குற்றம்சாட்டப்பட்டோர் தரப்பில் இறுதி வாதம் தொடங்கப்பட வேண்டும். ஆனால் கடந்த 2 நாட்களாக சசிகலா, சுதாகரன், இளவரசி தரப்பில் வாதம் தொடங்கப்படவில்லை.
மேலும் இறுதிவாதத்தை தொடங்க கால அவகாசம் கோரிய சசிகலா தரப்பு மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது. சொத்துக் குவிப்பு வழக்கில் இறுதி வாதத்தை இன்று 2வது நாளும் சசிகலா தரப்பினர் தொடங்கவில்லை.
இதனையடுத்து சசிகலா, இளவரசி, சுதாகரனுக்கு பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி கண்டனம் தெரிவித்துள்ளார். இறுதி வாதத்தை தொடங்காததால் மூவருக்கும் தலா ரூ.3000 அபராதம் விதித்தும் நீதிபதி உத்தரவிட்டார்
அத்துடன் இறுதிவாதம் நடைபெறும் நாட்களில் மூவரும் நீதிமன்றத்தில் கண்டிப்பாக ஆஜராக வேண்டும் என்றும் பெங்களூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications