புத்தாண்டில் பெங்களூரில் பிறக்கும் பெண் குழந்தைக்கு அடிக்கப்போகுது பம்பர் பரிசு!

Posted By:
Subscribe to Oneindia Tamil

பெங்களூரு: பெண் சிசுக்கொலையை தடுக்கவும், வறுமையில் உள்ள பெற்றோருக்கு உதவும் நோக்கோடு இந்த இலவச கல்வி அறிவிப்பை வெளியிட்டுள்ளதாக பெங்களூரு மேயர் சம்பத் ராஜ் கூறியுள்ளார்.

புத்தாண்டை கொண்டாட உலகமே தயாராகி வரும் நிலையில், பெங்களூரு மக்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சியை நகர மேயர் சம்பத் ராஜ் கொடுத்துள்ளார். அதாவது புத்தாண்டு அன்று பெங்களூரு அரசு மருத்துவமனையில் முதலாவதாக பிறக்கும் பெண் குழந்தைக்கு பள்ளி முதல் கல்லூரி வரை இலவச கல்வி அளிக்கப்படும் என அவர் கூறியுள்ளார்.

Bangalore mayor promise to give free education for first baby girl which to be born on new year

நாட்டில் பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதாசாரம் குறைந்து வருவதாலும், வறுமையில் வாழும் ஏழை பெற்றோருக்கு உதவும் நோக்கத்தோடு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக சம்பத் ராஜ் கூறியுள்ளார். பிறந்த குழந்தையின் வங்கியில் வைப்பு தொகையாக 5 லட்சம் போடப்படும் என்றும், அதனை அக்குழந்தையின் பெற்றோர் கல்விக்காக பயன்படுத்திக்கொள்ளலாம் என்றும் கூறியுள்ளார்.

இந்நிலையில் அந்த அதிர்ஷ்ட குழந்தை யார் என்று தற்போதே அரசு மருத்துவமனைகளில் பரபரப்பாக பேசப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Bangalore mayor promise to give free education for first baby girl which to be born on new year. Mayor sampath raj said that as the birth rate of girl child is decreasing gradually to avoid this we have introduced this scheme.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற