பஸ் போக்குவரத்து முற்றிலும் ஸ்தம்பித்ததால் பெங்களூரு மக்கள் அவதி..ஆட்டோக்களில் அநியாய ரேட்!
பெங்களூரு: கர்நாடக பந்த் காரணமாக, பெங்களூருவில் போக்குவரத்துதான் மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
மேகதாது அணை விவகாரம் தொடர்கா இன்று கர்நாடக பந்த் நடந்து வருகிறது. இதையொட்டி, காலை 6 மணி முதல் மாலை 6 மணிவரை முழு அடைப்பு நடத்த கன்னட அமைப்புகள் கோரிக்கைவிடுத்தன. இதற்கு, அரசு ஆதரவும் மறைமுகமாக இருப்பதாக கூறப்படுவதால், பந்த் வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது.

கர்நாடக அரசு பஸ் ஊழியர் சங்கங்களும், பந்த்துக்கு ஆதரவு தெரிவித்திருந்ததால் காலை முதலே பஸ் இயக்கம் நிறுத்தப்பட்டது. இது தெரியாமல், பந்த் லேசான அளவில்தான் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நினைத்து வெளியூர்கள் செல்ல கிளம்பியவர்களும், வெளியூர்களில் இருந்து பெங்களூரு உள்ளிட்ட தென் மாவட்ட நகரங்களுக்கு வந்தவர்களும் பெரிதும், பாதிக்கப்பட்டனர்.
பெங்களூருவில் ஆட்டோ, டாக்சி டிரைவர் சங்கங்கள், பந்த்துக்கு ஆதரவு கொடுத்திருந்தாலும், வருமான தேவைக்காக சிலர் ஆட்டோ, டாக்சிகளை இயக்கினர். ஆனால் அது சொற்ப அளவில் இருந்தது. மீட்டருக்கு மேல் பல மடங்கு பணம் கேட்டு பயணிகளை தொந்தரவு செய்த ஆட்டோ டிரைவர்களை காண முடிந்தது.
மெயின் ரோடுகளில், கடைகள் அடைக்கப்பட்டிருந்தாலும், உள் தெருக்களில் மளிகை கடைகள் திறந்து வைக்கப்பட்டுள்ளன. கன்னட அமைப்பினர் பேரணி வருவது போல இருந்தால் மட்டுமே அங்கு கடைகள் அடைக்கப்படுகின்றன.
பஸ் போக்குவரத்து இந்த அளவுக்கு பாதிக்கும் என்று தெரியாமல், பெங்களூரு மத்திய மார்க்கெட் பகுதியான கே.ஆர்.மார்க்கெட்டில் காய்கறி கடைகளை வழக்கம்போல திறந்த வியாபாரிகள், ஏமாற்றத்துடன் அமர்ந்துள்ளனர்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications