பெங்களூர் ‘குடிமகன்’களுக்கோர் நற்செய்தி.. இனி, நள்ளிரவு 1 மணி வரை பார் திறந்திருக்குமாம்!
பெங்களூர்: பெங்களூரில் உள்ள மதுபான விடுதிகளை இனி நள்ளிரவு 1 மணி வரை திறந்திருக்க அனுமதி வழங்கப் பட்டுள்ளது. முதல்கட்டமாக இந்த உத்தரவு வார இறுதி நாட்களுக்கு மட்டும் வழங்கப் பட்டுள்ளதாக கர்நாடக உள்துறை அமைச்சர் கே.ஜே.ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.
பொதுவாக சட்டம்-ஒழுங்குக் காரணங்களால் மதுபான விடுதிகளை இரவு 11 மணிக்கு மேல் திறந்து வைத்திருக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. ஆனால், பெங்களூர் மாதிரியான அனைத்து பகுதிகளையும் சேர்ந்த மக்கள் வாழும் பகுதிகளில் மருந்துக் கடைகள் போலவே உணவு மற்றும் மதுபான விடுதியையும் இரவுகளில் திறந்து வைத்திருக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது.
தற்போது, முதல்கட்டமாக வார இறுதி நாட்களான சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் மட்டும் மதுபான விடுதிகளை இரவு 1 மணி வரை திறந்து வைத்திருக்க கர்நாடக அரசு அனுமதி வழங்கியுள்ளது.
இது தொடர்பாக நேற்று பெங்களூரில், கர்நாடக உள்துறை அமைச்சர் கே.ஜே.ஜார்ஜ் கூறியதாவது:-

நேரம் நீட்டிப்பு...
பெங்களூரில் உணவகங்கள் தற்போது 11 மணி வரை திறந்திருக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதற்கான அனுமதி நேரத்தை நள்ளிரவு 1 மணி வரை நீட்டிக்க அரசு அனுமதி வழங்குகிறது. ஆனால் மதுபான விடுதிகள் மற்றும் உணவு விடுதிகளுக்கு (ரெஸ்டாரண்டு) வாரத்தில் வெள்ளிக்கிழமை மற்றும் சனிக்கிழமை ஆகிய நாட்களில் மட்டும் இந்த உத்தரவு பொருந்தும்.

அடுத்தகட்ட முடிவு....
இந்த புதிய விதிமுறை பரிசோதனை அடிப்படையில் நடைமுறைப்படுத்தப்படுகிறது. 3 மாதங்கள் இதன் சாதக-பாதகங்களை ஆராயந்த பிறகு அடுத்தகட்ட முடிவு எடுக்கப்படும்.

கோரிக்கை...
வாரத்தில் 7 நாட்களிலும் மதுபான விடுதிகள் மற்றும் உணவு விடுதிகளை நள்ளிரவு 1 மணி வரை திறந்து வைத்திருக்க அனுமதி வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

திவிர ஆலோசனைக்குப் பின் முடிவு....
ஆனால் நாங்கள் முதலில் 2 நாட்களுக்கு மட்டும் அனுமதி அளித்து இருக்கிறோம். இந்த திட்டத்திற்கு ஆதரவும், எதிர்ப்பும் இருக்கிறது. ஆனால் போலீஸ், சுற்றுலா மற்றும் கலால் துறை அதிகாரிகளுடன் கலந்து ஆலோசனை நடத்திய பிறகு இந்த முடிவை அரசு எடுத்துள்ளது.

பாதிப்பு....
ஏராளமான மக்கள் குறிப்பிட்ட கால எல்லையை தாண்டி வேலை செய்கிறார்கள். அத்தியாவசிய தேவைகளான மருந்து மற்றும் உணவகங்கள் மூடப்பட்டு விடுவதால் அத்தகைய மக்கள் பாதிக்கப்படுகிறார்கள்.

மக்கள் வசதிக்காக...
பெங்களூர் ஒரு பெரிய மாநகரம் ஆகும். நாட்டின் அனைத்து பகுதிகளை சேர்ந்த மக்களும் இங்கு வாழ்கிறார்கள். அவர்கள் எப்போதும் வந்து செல்கிறார்கள். அவர்களுக்கு உணவக வசதி வழங்க வேண்டியது அவசியம். சட்டம்-ஒழுங்கு நன்றாக இருக்கும்வரை இவற்றை அனுமதிக்க வேண்டும்' என இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications