பெங்களூரில் பியூசி மாணவியை சுட்டுக் கொன்ற பியூன்- இன்னொரு மாணவி படுகாயம்
பெங்களூர்: பெங்களூரில் பியூசி மாணவி ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.
மாணவியை சுட்டுக் கொன்று விட்டு தலைமறைவான பள்ளிக் கூட பியூன், கைது செய்யப்பட்டுள்ளார்.
கர்நாடக மாநிலம் தும்கூரில் உள்ள பவகடா பகுதியைச் சேர்ந்தவர் கௌதமி (18). இவர் ஒயிட்பீல்டு அருகே உள்ள காடுகோடியில் இருக்கும் பள்ளி ஒன்றில் பியூசி இரண்டாம் ஆண்டு அதாவது பிளஸ் 2 படித்து வந்தார். இவர் பள்ளி விடுதியில் தங்கி படித்து வந்தார்.

அந்த பள்ளியில் பியூன் வேலை பார்த்து வந்த மகேஷ் (30) என்பவர் கௌதமியை ஒரு தலையாக காதலித்து வந்துள்ளார். தனது காதலை அவர் மாணவியிடம் தெரிவித்தும் உள்ளார். ஆனால் மாணவி மகேஷின் காதலை ஏற்கவில்லை.
இதனால் ஆத்திரம் அடைந்த மகேஷ் கடந்த சில மாதங்களாக மாணவியை தன்னை காதலிக்குமாறு வற்புறுத்தி தொல்லை கொடுத்து வந்துள்ளார். இருப்பினும் மாணவி மகேஷின் காதலை கண்டுகொள்ளவில்லை. இந்நிலையில் மகேஷ் நேற்று இரவு 10 மணிக்கு மாணவியை சந்தித்து தொல்லை கொடுத்துள்ளார். அப்போது அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
வாக்குவாதம் நடக்கையிலேயே மகேஷ் தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து கௌதமியை சுட்டார். இதில் கௌதமி சம்பவ இடத்திலேயே பலியானார். இதை பார்த்து தடுக்க வந்த கௌதமியின் தோழி ஷிரிஷா படுகாயம் அடைந்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஷிரிஷாவுக்கு இன்று அறுவை சிகிச்சை நடந்தது.
இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தலைமறைவாக இருந்த மகேஷை தேடி வந்தனர். இந்நிலையில் இன்று மதியம் மகேஷ் கைது செய்யப்பட்டுள்ளார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications