தெரு நாய் போட்ட 8 குட்டிகளை பாறாங்கல்லை வீசி பயங்கரமாக கொன்ற பெங்களூர் பெண்!
பெங்களூர்: பெங்களூரில் பெண் ஒருவர் தெருநாய் ஒன்று தனது வீட்டிற்கு அருகே குட்டி போட்டதை பிடிக்காமல் அதன் 8 குட்டிகளையும் பாறாங்கல் மீது வீசி எறிந்து கொன்றுள்ளார்.
டெல்லியில் ஆண் ஒருவர் நாய்களை கொலை செய்தது சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்த நிலையில் பெங்களூரிலும் அதை போன்ற சம்பவம் ஒன்று நடந்துள்ளது. பெங்களூரில் வசிக்கும் பொன்னம்மா என்பவரின் வீட்டிற்கு அருகே தெருநாயான அம்மு 8 குட்டிகள் போட்டுள்ளது.

தனது வீட்டிற்கு அருகே நாய் குட்டிபோட்டது பொன்னம்மாவுக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. இதையடுத்து பொன்னம்மா அம்முவுக்கு பாடம் கற்பிக்க அது ஈன்ற 8 குட்டிகளையும் பாறாங்கல் மீது தூக்கி வீசினார். இதில் 7 குட்டிகள் உடனே இறந்துவிட்டன. ஒரு குட்டி மறுநாள் இறந்துவிட்டது.
இந்த சம்பவம் குறித்து அப்பகுதி மக்கள் அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். பொன்னம்மா மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்கும்.
நாய் அம்முவால் தனது குட்டிகள் இறந்ததை ஏற்கமுடியாமல் அவை புதைக்கப்பட்டுள்ள இடத்தை தோண்டிக் கொண்டே இருக்கிறது. பொன்னம்மாவின் வீடு இருக்கும் பகுதியில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவானதை போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications