வங்கதேசத்தில் இருந்து சட்டவிரோதமாக வந்தவர்கள் திரும்பிச் செல்ல வேண்டும்: மோடி
கொல்கத்தா: வங்கதேசத்தில் இருந்து சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் வந்தவர்கள் அனைவரும் திரும்பிச் செல்ல வேண்டும் என்று பாஜக பிரதமர் வேட்பாளர் மோடி தெரிவித்துள்ளார்.
பாஜக பிரதமர் வேட்பாளரான மோடி மேற்கு வங்க மாநிலம் கிருஷ்ணாநகர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளரான சத்யபிரதா முகர்ஜிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தார்.

அப்போது அவர் கூறுகையில்,
வங்கதேசத்தில் இருந்து சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் வந்தவர்கள் அனைவரும் திரும்பிச் செல்ல வேண்டும். 2005ம் ஆண்டில் மமதா பானர்ஜி கூறியதை தான் நான் தற்போது கூறுகிறேன். சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் ஊடுருவும் செயல் அதிகரித்து வருவதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. உச்ச நீதிமன்றத்தின் கருத்தை நான் மதிக்கிறேன்.
அதே சமயம் வங்கதேசத்தில் இருந்து அகதிகளாக வருபவர்களுக்கு இந்தியா மறுவாழ்வு அளிக்க வேண்டும். இரண்டு விதமான மக்கள் நம் நாட்டுக்கு வருகிறார்கள். ஒன்று சட்டவிரோதமாக மற்றொன்று அகதிகளாக. அகதிகளாக வருபவர்கள் நம் குடும்பம் போன்றவர்கள். அவர்களை மதிக்க வேண்டியது நம் பொறுப்பு.
2005ம் ஆண்டு மமதா பானர்ஜி சட்டசபையில் சபாநாயகரின் இருக்கையில் தனது ஷாலை தூக்கிப் போட்டு வங்கதேசத்தில் இருந்து வந்து குடிபெயர்ந்தவர்களை உடனே வெளியே அனுப்ப வேண்டும் என்றார் என்பதை இங்கு குறிப்பிட விரும்புகிறேன்.
இங்கு உள்ளவர்களுக்கே வேலை இல்லாமல் உள்ளது. அப்படி இருக்கையில் வங்கதேசத்தில் இருந்து வருபவர்களுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்படுகிறது என்றார்.
-
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு












Click it and Unblock the Notifications