டெல்லி துணை நிலை ஆளுநருக்கு ஹைகோர்ட் 'அட்வைஸ்'- ஏக குஷியில் கேஜ்ரிவால்!!
டெல்லி: டெல்லி யூனியன் பிரதேசத்தில் கூடுதல் அதிகாரம் ஆளுநருக்கா? முதல்வருக்கா? என்ற உச்சகட்ட மோதல் நடைபெற்று வரும் நிலையில், மாநில ஆளுநர் என்பவர் அமைச்சர்களின் ஆலோசனை உதவியுடன்தான் செயல்பட வேண்டும் என்று டெல்லி உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. டெல்லி உயர்நீதிமன்றத்தின் இந்த கருத்தை முதல்வர் கேஜ்ரிவால் உற்சாகத்துடன் வரவேற்றுள்ளார்.

டெல்லி யூனியன் பிரதேசம் என்பதால் மத்திய அரசின் பிரதிநிதியான ஆளுநருக்கே அதிக அதிகாரம் என்று மத்திய அரசும் ஆளுநர் நஜீப் ஜங்கும் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் மக்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசு ஆட்சியில் இருக்கும் போது அந்த அரசுக்குத்தான் அதிகாரிகள் நியமனம் உள்ளிட்ட அதிகாரங்கள் இருக்கிறது என்று முதல்வர் கேஜ்ரிவால் போராடி வருகிறார்.
Congrats. Del HC strikes down centre's effort to weaken Delhi's ACB. Del HC- Centre has no jurisdiction to pass notification on ACB's powers
— Arvind Kejriwal (@ArvindKejriwal) May 25, 2015 இதனால் டெல்லி ஆட்சி நிர்வாகத்தில் மிகப் பெரிய தேக்க நிலை ஏற்பட்டுள்ளது. இந்த பஞ்சாயத்தில் தலையிட்ட மத்திய அரசும், ஆளுநருக்கே அதிக அதிகாரம் எனக் கூறி வருகிறது.
இந்த நிலையில் யாருக்கு அதிகார்ம என்பது தொடர்பான வழக்கில் கருத்து தெரிவித்துள்ள டெல்லி உயர்நீதிமன்றம், டெல்லி மாநில ஊழல் தடுப்புப் பிரிவானது மத்திய அரசிடம் இருந்து உத்தரவுகளைப் பெறாமல் கேஜ்ரிவால் அரசிடம் இருந்து உத்தரவுகளைப் பெற வேண்டும்; அதேபோல் மாநில அமைச்சர்களின் ஆலோசனைகள் உதவியுடன் ஆளுநர் செயல்பட வேண்டும்; ஆளுநருக்கே அதிக அதிகாரம் என்று மத்திய அரசு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது உள்நோக்கம் கொண்டதாக இருக்கலாம் என்ற சந்தேகம் உள்ளது என்று தெரிவித்துள்ளது.
டெல்லி உயர்நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பை வரவேற்பதாக முதல்வர் கேஜ்ரிவால் தமது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
-
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
கை, கால்களை வெட்டினால்தான் பயம் வரும்! பலாத்கார வழக்கில் கட் அண்ட் ரைட்டாக சொன்ன கர்நாடக ஹைகோர்ட் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்?












Click it and Unblock the Notifications